விண்வெளியில் சாதனை படைத்த முதல் பெண் விஞ்ஞானி

Report Print Vethu Vethu in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasri.com

சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் பெண் தளபதியான பெக்கி விட்சன் இன்று காலை கஸக்கஸ்தானின் ரஷ்ய விண்வெளி அமைப்பை வந்தடைந்தார்.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் சார்வில் பெக்கி விட்சனின் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார்.

இவர் 4,623 முறை பூமியை சுற்றி வந்துள்ளார். மொத்தம் 196.7 மில்லியன் கிலோமீட்டர் பரப்பளவிலான விண்வெளிப் பகுதியில் அமெரிக்கர் விட்சனின் கால்தடம் பதிந்தது.

ஒட்டுமொத்தமாக விட்சன் அவரது வாழ்நாளில் 665 நாட்களை விண்வெளியில் செலவிட்டுள்ளார்.

விண்வெளியில் அதிக நாட்களை செலவிட்ட முதற் பெண் விஞ்ஞானி என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

பெக்கி விட்சனின் தனது விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமி திரும்பியுள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்