விண்வெளி ஆராய்ச்சியில் வரலாற்று சாதனை படைத்த ஜப்பான்

Report Print Peterson Peterson in விஞ்ஞானம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

விண்வெளியில் உள்ள பால்வீதி மண்டலத்திற்கு மத்தியில் மாபெரும் புதிய கருந்துளையை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கற்பனையில் கணிக்க முடியாத அளவிற்கு விண்வெளியில் ஏராளமான மர்மங்கள் புதைந்துள்ளன.

advertisement

இந்த மர்மங்களில் ஒன்று தான் Black Hole எனப்படும் கருந்துளை.

நமது சூரிய மண்டலம் அமைந்துள்ள பால்வீதியில் 100 கருந்துளைகள் இருக்கின்றன. இவற்றில் 60 கருந்துளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இவை ஒவ்வொன்றும் சூரியனை விட பல மடங்கு பெரியதாகும்.

கருந்துளையை பற்றி ஜப்பானில் உள்ள Keio பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆராய்ச்சியாளர்கள் நேற்று வெளியிட்டுள்ள தகவலில் ‘நமது பால்வீதியின் மையத்தில் ராட்சத கருந்துளை ஒன்று இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கருந்துளையானது நமது சூரியனை விட ஒரு லட்சம் மடங்கு பெரியதாகும்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளையானது பால்வீதியில் உள்ள இரண்டாவது பெரிய கருந்துளையாகும்.

Sagittarius A எனப் பெயரிடப்பட்ட கருந்துளை தான் மிகப்பெரியது. இது சூரியனை விட 400 மில்லியன் மடங்கு பெரியது.

விண்வெளியில் காணப்படும் ஒவ்வொரு நட்சத்திரமும் பில்லியன் ஆண்டுகளாக சுற்றி வரும்.

advertisement

ஒரு நட்சத்திரத்தின் ஆயுட்காலம் நிறைவடையும்போது அது தன்னை தானே வெடித்துக்கொள்ளும். இந்நிகழ்வு Supernova என அழைக்கப்படுகிறது.

இந்நிகழ்வின்போது ஏற்படும் வெற்றிடமே கருந்துளை என கூறப்பட்டாலும் இது இன்றளவும் உறுதி செய்யப்படவில்லை.

கருந்துளை பற்றிய ஆராய்ச்சியில் பிரபஞ்சம் தோன்றியது குறித்து தகவல்கள் வெளியாகும் என்பதால் இது தொடர்பான ஆராய்ச்சி தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்