கற்பாறைகளை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கடற்கரையில் வியக்க வைக்கும் கட்டிட கலைநயம் கொண்ட Opera House காணப்படுகின்றது.

இப் பகுதியில் ஆச்சரியம் அளிக்கக்கூடிய கற்பாறைகளை செயற்கையான முறையில் வடிவமைப்பதற்கு விஞ்ஞானிகள் எண்ணியுள்ளனர்.

இதற்கான முயற்சியில் சிட்னியில் உள்ள தொழில்நுட்பத்திற்கான பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஊடாக அப் பகுதியல் உயிரியல் பல்வகைமையை அதிகரிக்க முடியும் என எண்ணுகின்றனர்.

இவ்வாறு அமைக்கப்படும் பாறைகள் ஒவ்வொன்றும் ஏறத்தாழ 3.2 அடிகள் வரை நீளமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

அதேவேளை கன சதுர வடிவம் மற்றும் கோள வடிவங்களில் இப் பாறைகள் அமைக்கப்படவுள்ளன.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்