மூப்படைதலை தள்ளிப்போடும் காளான்கள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
Cineulagam.com

மனிதர்களின் பல வகையான நோய்களுக்கு நிவாரணிகளையும், சிகிச்சை முறைகளையும் கண்டுபிடித்த மருத்துவ உலகினால் இதுவரை மூப்படைதலை தடுக்கக்கூடிய வழிமுறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனினும் காளான்களை உண்பதால் மூப்படைதலை தள்ளிப்போட முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அனைவருக்கும் பிடித்த பீட்சாவில் கூட காளான்களை சேர்த்து உண்ண முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பென்சில்வேனியாவிலுள்ள ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இதனைக் கண்டறிந்துள்ளனர்.

அனேகமான காளான்களில் காணப்படும் Ergothioneine, Glutathione ஆகிய சேர்வைகளே இவ்வாறு மூப்படைதலுடன் போராடக்கூடியதாக இருக்கின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்