பூமிக்கு அருகில் வந்த மர்மபொருள் வேற்றுகிரக விண்கலமா? விஞ்ஞானிகள் தகவல்

Report Print Kabilan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

கடந்த அக்டோபர் மாதத்தில் பூமியை கடந்து சென்ற நீள் வடிவ மர்ம பொருள் வேற்றுகிரக விண்கலமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க விஞ்ஞானிகள், கடந்த பத்து ஆண்டுகளாக வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபரில் பூமிக்கு மிக அருகில், ஊசி வடிவிலான நீள்வட்ட மர்ம பொருள் மணிக்கு 1,96,000 மைல் வேகத்தில் கடந்து சென்றது.

அமெரிக்காவின் ஹவாயில் உள்ள பேன் ஸ்டார்ஸ்-1 என்னும் தொலைநோக்கியில் அந்த மர்ம பொருள் பதிவானது.

இதுகுறித்து ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் அவி லோப் கூறியபோது, ‘மர்ம பொருள், சிவப்பு நிறத்தில் சுமார் 400 மீட்டர் நீளம் கொண்டதாக இருந்தது.

தற்போது, அந்த மர்ம பொருள் நமது தொலைநோக்கிகளின் கண்ணுக்கு புலப்படாத தொலைவுக்குச் சென்றுவிட்டது.

அது வேற்றுகிரக விண்கலமா என்பதை தொலைநோக்கியில் பதிவான காட்சியை வைத்து ஆய்வு செய்து வருகிறோம்.

மேலும், அமெரிக்காவின் கிரீன் பேங்கில் உள்ள உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி மூலமாக, மர்ம பொருளில் இருந்து ஏதாவது ரேடியோ சிக்னல்கள் கிடைக்கிறதா என்ற ஆய்வையும் மேற்கொண்டு வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்