வியாழனின் அரிய புகைப்படங்களை வெளியிட்டது ஜூனோ

Report Print Shalini in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

சூரியக் குடும்பத்தின் பெருங்கோளான வியாழன் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கு அமெரிக்காவால் அனுப்பப்பட்ட ஜூனோ விண்கலம் தனது பணியை சிறப்பாக செய்துள்ளது.

வியாழனுக்கு மிக அருகில் சென்ற ஜூனோ விண்கலம் மிகத் துல்லியமாக வியாழனின் புதிய புகைப்படங்களை அனுப்பியுள்ளது.

இந்த புகைப்படங்களை சீனாவின் Global Television Network தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

வியாழன் தொடர்பில் இதுவரை யாரும் அறிந்திடாத அழகும், வர்ணங்களும் இந்த புகைப்படத்தில் தெளிவாக தெரிகின்றது.

2011ம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி ஜூனோ என்ற விண்கலம் வியாழன் கோளை ஆராய்ச்சி செய்வதற்காக விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மொத்தம் 7,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த விண்கலம், வியாழனைச் சுற்றிவரும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறது.

இதற்கு முன்னதாகவும், வியாழனின் பல புகைப்படங்களை ஜூனோ விண்கலம் அனுப்பிய நிலையில், தற்போது அனுப்பப்பட்டுள்ள இந்த புதிய புகைப்படங்கள் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்