செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்: நாசா வெளியிட்ட ஆச்சரிய புகைப்படம்

Report Print Raju Raju in விஞ்ஞானம்
879Shares
879Shares
lankasrimarket.com

செவ்வாய் கிரகத்தில் நாசா எடுத்துள்ள புகைப்படத்தில் இரண்டு ஏலியன்களின் உருவம் பதிவாகியுள்ளதாக ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசா விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு விடயங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதிலும் ஏலியன் தொடர்பான ஆராய்ச்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் செவ்வாயில் எடுத்த புகைப்படத்தை நாசா வெளியிட்டது.

அதில் இரண்டு மர்ம உருவங்கள் பதிவாகியுள்ளது. இது ஏலியனாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து ஏலியன் ஆராய்ச்சி நிபுணர் ஸ்காட் சி வாரிங் தனது வலைப்பக்கத்தில் கூறுகையில், நாசா எடுத்த புகைப்படத்தில் இருப்பது ஏலியனாக இருக்க வாய்ப்புள்ளது. இதை உறுதியாக கூறமுடியாவிட்டாலும் ஏலியன் செவ்வாயில் இருப்பதற்கு இது ஒரு சான்றாகும்.

ஏலியன் இன்று வாழுகிறது என்பதை நீங்கள் நம்ப மறுக்குறீர்களா? அப்படியென்றால் இந்த புகைப்படம் உங்களுக்கு ஒரு ஆதாரம் என தெரிவித்துள்ளார்.

ஆனாலும், குறித்த புகைப்படத்தில் உள்ளது பாறையாக இருக்க வாய்ப்புள்ளது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் செவ்வாயில் ஏலியன்ஸ் புதைபடிவங்கள் இருப்பதாகவும், அது அங்கு புழுக்கள் இருந்ததற்கான சான்று எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்