கார்ட்டோசாட்-2 எடுத்த முதல் புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ

Report Print Kabilan in விஞ்ஞானம்
0Shares
0Shares
Cineulagam.com

இந்தியாவின் 100வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி பி.எஸ்.எல்.வி.சி-40 எனும் ராக்கெட்டின் மூலம், கார்ட்டோசாட்-2 என்ற தனது நூறாவது செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

அந்த செயற்கைக்கோள், பூமியில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் உயரத்தில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கார்ட்டோசாட் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள ஹொல்கார் கிரிக்கெட் மைதானத்தை உள்ளடக்கிய இந்த படம், கடந்த 15ஆம் திகதி எடுக்கப்பட்டது.

இயற்கை வளங்களை ஆய்வு செய்யும் வகையில், அதிநவீன கமெராக்களும், தொலையுணர்வு கருவிகளும் கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோளில் இணைக்கப்பட்டுள்ளன.

இது தவிர, கடல் வழி போக்குவரத்து கண்காணிப்பு, நீர்வள மேம்பாடு, நகர்ப்புற உள் கட்டமைப்பு பணிகளுக்கும், கார்ட்டோசாட்-2 தரும் தகவல்கள் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், இந்திய ராணுவத்துக்கு கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள், மிகப்பெரிய அளவில் தனது பங்களிப்பை தர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்