பூமியை தாக்கவிருக்கும் அபாயகரமான விண்கல்

Report Print Arbin Arbin in விஞ்ஞானம்
0Shares
0Shares
Cineulagam.com

சுமார் ஒரு கிலோமீற்றர் அகலம் கொண்ட அபாயகரமான விண்கல் ஒன்று இன்னும் இரண்டு வார காலத்தில் பூமியை நெருங்கும் என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

2002 AJ129 என பெயரிடப்பட்டுள்ள குறித்த விண்கல்லான எதிர்வரும் பெப்ரவரி புலப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் அமைந்துள்ள ஹைட் பார்க் அளவுக்கு பெரிதான குறித்த விண்கல்லானது 1.1 கி.மீ அகலம் கொண்டதாகும்.

இதுவரை பூமியை நெருங்கிய விண்கற்களில் இது மிகப்பெரியது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மிகவும் ஆபாத்தான வகை என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த விண்கல்லானது பூமியை தாக்கும் எனில் விளைவுகள் மிகவும் அச்சம் தரும் வகையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இதனால் மொத்த மனித குலமும் அழிந்துவிடும் என கூற முடியாது என தெரிவித்துள்ளார் Charles Bardeen என்ற ஆய்வாளர்.

குறித்த விண்கல் தாக்குவதால் பாரிய அளவிலான தூசு மற்றும் புகை எழும்பலாம் எனவும், காட்டுத்தீ போன்ற அசம்பாவிதங்களும் ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

இதன் தாக்கம் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் எனவும், இதனால் சூரிய வெளிச்சம் பூமிக்கு தடைபடலாம் எனவும், அதனால் காலநிலையில் பாரிய மாறுதல் ஏற்படும் எனவும் விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பாழாகும் வாய்ப்பு உண்டு எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும் குறித்த விண்கல்லானது பூமியை தாக்கும் வாய்ப்பு மிக மிக குறைவே எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியில் டைனோசர்கள் இனத்தையே ஒட்டுமொத்தமாக அழித்த விண்கல்லின் அகலமானது சுமார் 10 ல் இருந்து 15 கி.மீ இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்