சுனாமியை முற்கூட்டி அறிய ஒலி அலைகளைப் பயன்படுத்த திட்டம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
76Shares
76Shares
lankasrimarket.com

சுனாமி தாக்கம் அதிகமாக உள்ள இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாக்க புதிய எச்சரிக்கை முறைமை ஒன்றினை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

இதற்கு ஒலி அலைகளைப் பயன்படுத்த முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

இதற்கிடையில் சுனாமியின் அளவு மற்றும் அழுத்தம் என்பவற்றினை முன்கூட்டியே அறிந்தால் அது தொடர்பில் மக்களை சரியான முறையில் எச்சரிக்கலாம் என கணிதவியலாளர்கள் கருதுகின்றனர்.

அதேபோன்று சுனாமியின் வீரியம் அதிகரித்த பின்னர் புவியீர்ப்பு அலைகள் உயர் வேகத்தில் அசைகின்றன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல்களை ஒன்றிணைத்து வேகமாக செல்லக்கூடிய ஒலி அலைகளைப் பயன்படுத்தி முற்கூட்டியே சுனாமி எச்சரிக்கை தரக்கூடிய ஒரு முறைமையினை உருவாக்கலாம் என கார்டிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விரைவில் இது சாத்தியப்படுத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறிருக்கையில் இவ் வாரம் அலஸ்காவில் 7.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டிருந்ததுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று கடந்த 2004ம் ஆண்டு இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் 11 நாடுகளைச் சேர்ந்த 230,000 மக்கள் வரை கொல்லப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்