விண்வெளியில் பறக்கும் முதல் கார்: உலக நாடுகளை வியக்க வைத்த சாதனை

Report Print Harishan in விஞ்ஞானம்
474Shares
474Shares
lankasrimarket.com

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான டெஸ்லா காரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி புதிய சாதனை படைத்துள்ளார் அமெரிக்க விஞ்ஞானி எலோம் மஸ்க்.

அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வருபவர் எலோன் மஸ்க்.

செவ்வாய் கிரகத்தை கண்காணிக்கும் கெமரா வசதியுடன் கூடிய காரை விண்வெளிக்கு செலுத்த நினைத்த எலோன், உலகின் மிக சக்தி வாய்ந்த 27 எஞ்சின் ராக்கெட்டை வடிவமைத்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளார்.

ஃப்லோரிடா மாகாணத்தின் கேப் கானவாரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டுள்ள இந்த ‘ஃபால்கன்’ ராக்கெட் இன்னும் சில நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் அளவுக்கு 300 கிமீ வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலோன் மஸ்கின் இந்த சாதனையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெகுவாக பாராட்டியுள்ளார்.

நாசா, இஸ்ரோ நிகழ்த்த முடியாத இந்த சாதனையை தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிகழ்த்தியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்