அல்ஸைமர் நிவாரணி மாத்திரையின் எதிர்பாராத நன்மை கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

மறதி நோயாகக் கருதப்படும் அல்ஸைமர் நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படும் மாத்திரையானது மற்றுமொரு நன்மையைத் தரக்கூடியதாக இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது Tideglusib எனும் குறித்த மாத்திரையினை தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும்போது பற்சிதைவு நோயையும் நாளடைவில் குணப்படுத்தக்கூடியதாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுண்டெலிகளில் குறித்த மாத்திரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போதே சிதைவடைந்து பற்கள் மீளவும் உருவாக்கப்படுவதை அவதானித்துள்ளனர்.

இந்த ஆய்வினை College London Dental Institute ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னர் 2017ம் ஆண்டில் பற்சிதைவு நோயைக் குணப்படுத்துவதற்காக கொலாஜன் நார்களால் உருவாக்கப்பட்ட மக்கக்கூடிய பஞ்சுகளை பற்களுக்கு இடையே வைத்துள்ளனர்.

இதன்போது ஆறு வாரங்களில் சிதைவடைந்து பற்கள் மீளப் புதிப்பக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்