பிரபஞ்சத்தின் மிக இருண்ட கிரகம்: பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Report Print Kabilan in விஞ்ஞானம்
163Shares
163Shares
lankasrimarket.com

பிரித்தானியாவின் கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நிலக்கரியை விட கருப்பான கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.

நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் இந்த கிரகத்தை கண்டறிந்துள்ளனர். இந்த கிரகம் பூமியிலிருந்து 470 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

விஞ்ஞானிகள் இந்த கிரகத்திற்கு WASP-104b என பெயர் வைத்துள்ளனர். இதுதொடர்பாக கீல் பல்கலைக் கழகத்தின் அஸ்ட்ரோபிஸிக்ஸ் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானி டியோ மோக்னிக் கூறுகையில்,

‘இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களிலேயே இதுதான் மிகவும் இருண்ட கிரகமாக இருக்கிறது. தனது நட்சத்திரங்களிடமிருந்து பெறப்படும் ஒளியில் 99 சதவிதத்தை உள்வாங்கிக் கொள்கிறது.

குறைந்த அளவு ஒளியை மட்டுமே இது உமிழ்கிறது. ஒவ்வொரு கிரகமும் தங்களுக்கு அருகிலுள்ள நட்சத்திரங்களிலிருந்து ஒளியைப் பெற்று உமிழ்வது இயல்பு.

ஆனால், இந்த கிரகம் ஒளியை உட்கிரகித்துக் கொண்டு சிறிய அளவிலேயே வெளியே உமிழ்கிறது. வெள்ளி கிரகமானது 70 சதவித ஒளியை உமிழ்கிறது.

மற்ற சில கிரகங்கள் 10 சதவித அளவிலேயே ஒளியை உமிழ்கின்றன. மஞ்சள் நிற குறுகிய நட்சத்திர புவி வட்டப் பாதையில் உள்ளது. இது ஒரு சூடான வியாழன் கிரக வகையாக இருக்கலாம்.

வியாழன் கிரகமானது வாயுக்கள் நிறைந்தது. அதைப் போலவே சூடான வியாழன் கிரக வகைகள், வாயுக்களை அதிகமாகக் கொண்டிருக்கும்.

WASP-104b கிரகமானது, தனது வட்டப் பாதையை சுற்றி வர 1.76 நாட்களை எடுத்துக் கொள்கிறது. இதுதொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

Reuters

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்