விண்வெளி ஆய்வில் புதிய சோதனை: நாசா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
61Shares
61Shares
lankasrimarket.com

நாசா விண்வெளி ஆய்வு மையம் உட்பட ஏனைய விண்வெளி ஆய்வு நிலையங்களும் தற்போது விண்வெளி ஆய்வின்போது அதிக அளவில் சூரிய சக்தியையே பயன்படுத்துகின்றன.

எனினும் இதனைத் தாண்டி அதிக சக்தியை பயன்படுத்த வேண்டிய தேவை மேற்கண்ட நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அணு சக்தியைப் பயன்படுத்துவது தொடர்பில் பிரேரணைகள் முன்மொழியப்பட்டு வந்தன.

இவற்றின் தொடர்ச்சியாக நாசா நிறுவனம் புதிய வகை அணு சக்தியைப் பயன்படுத்துவது தொடர்பிலான பரிசோதனை முயற்சியில் இறங்கியுள்ளது.

இதன் ஊடாக சந்திரன், செவ்வாய் கிரகம் போன்ற பகுதிகளில் நீண்ட கால ஆய்வினை வினைத்திறனாக மேற்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Kilopower Reactor Using Stirling Technology (KRUSTY) என அழைக்கப்படும் குறித்த பரிசோதனையின் ஊடாக 10 கிலோ வாட்ஸ் மின்சக்தியை பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்