வளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு: வெளியானது அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
155Shares
155Shares
lankasrimarket.com

உலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் செறிவு நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

இவ் வாயு அதிகரிப்பினால் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் ஏற்படும் என ஏற்கணவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு புதிய பாதிப்பு ஏற்படவுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது இந்த நூற்றாண்டின் முடிவில் (2100ம் ஆண்டளவில்) உற்பத்தி செய்யப்படும் அரிசியில் தற்போது கிடைக்கின்ற அளவிற்கு விட்டமின் B, புரதங்கள் மற்றும் ஏனைய கனிமப்பொருட்கள் அடங்கியிருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரதான காரணமாக காபனீரொட்சைட் செறிவு அதிகரிப்பு காணப்படுவதாக உறுதிப்டுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதில் விட்டமின் B1, B2, B5 மற்றும் B9 ஆகியனவும் அதிகளவில் குறைந்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இதேபோன்றதொரு ஆய்வு ஜப்பானில் மேற்கொண்டிருந்த சந்தர்பத்தில் 10.3 சதவீதத்தினால் புரதம் குறைந்திருக்கும் எனவும், 8 சதவீதத்தினால் இரும்புச் சத்தும், 5.1 சதவீதத்தினால் துத்தநாக சத்தும் குறையும் என அறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்