மாரடைப்பிற்கான சிகிச்சை மூளைத் தாக்கங்களைக் கொண்டுவரலாம்: புதிய ஆய்வு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
20Shares
20Shares
lankasrimarket.com

இதயத் துடிப்பு நிற்கும் போது அதன் தொழிற்பாட்டை திரும்பப் பெற வைத்தியர்கள் அதிகம் பயன்டுத்தவது அதிரினலீன்.

தற்போது இதன் பாதுகாப்புத் தன்மை மற்றும் வினைத்திறன் தொடர்பாக ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதிரினலீன் இதயத்திற்கான குருதிச் சுற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இதயத் துடிப்பு மீளப் பெற்படுவதற்கு உதவியாக இருக்கின்றது.

அதேநேரம் இது மூளைப் பகுதியிலுள்ள சிறிய இரத்த குழாய்களுக்கான ஓட்டத்தை குறைக்கிறது.

லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து அதிரினலீன் சிகிச்சை பெற்றவர்களில் 1/3 பங்கினர் நடக்கமுடியாமல் போயுள்ளதுடன், தாங்களாகவே கவனித்துக் கொள்ளும் தன்மை அற்றுப்போயுள்ளதும் தெரிய வந்துள்ளது.

அதாவது ஆய்வுகளிலிருந்து அதிரினலீன் நரம்பியல் தொழிற்பாட்டை அதிகம் பாதிப்தாக தெரியவருகிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்