செய்தி
ஒலிவடிவம்: type = '2'; $ADVERTS[0]->file = '/adverts/news_view/media_player/audio_news01.gif'; $ADVERTS[0]->url = 'http://www.lankasri.fm'; $ADVERTS[0]->border = '0'; $ADVERTS[0]->width = '175'; $ADVERTS[0]->height = '27'; $ADVERTS[0]->static = '0'; $index = rand(0, count($ADVERTS) - 1); $advert = ''; if($ADVERTS[$index]->type == 1) { $advert = file_get_contents(substr($ADVERTS[$index]->file, 1)); } else { $href_beg = ($ADVERTS[$index]->url ? '' : ''); $href_end = ($ADVERTS[$index]->url ? '' : ''); $advert = "$href_begfile}\" width=\"{$ADVERTS[$index]->width}\" height=\"{$ADVERTS[$index]->height}\" border=\"0\" style=\"border: solid {$ADVERTS[$index]->border}px #CCCCCC;\">$href_end"; } if(trim($advert)) { echo $advert; } ?>
தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்ததற்கான காரணங்கள்!- ஐ.நா. வில் இந்திய பிரதிநிதி
[ வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 12:00.49 AM GMT ] [ பி.பி.சி ]
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிப்பதற்கான காரணங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியப் பிரதிநிதி விளக்கியிருந்தார்.

இலங்கையின் படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது.

இலங்கையில் வாழும் அனைத்து இன மற்றும் மதக் குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்நாட்டில் கொண்டுவருவதற்கு இந்த பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதாய் இந்தியா நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

13ஆவது அரசியல் சாசன சீர்திருத்தத்தையும் அதற்கும் மேற்பட்டும் இலங்கையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை நோக்கி இலங்கை நடைபோட வேண்டும் என்று,ம் பரந்துபட்ட கலந்துரையாடலுடன் அரசியல் நடவடிக்கைகளை அது முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

செய்த காரியத்துக்கு ஆட்களைப் பொறுப்பேற்கச் செய்வதிலும் மனித உரிமைகளை பேணுவதிலும் தனக்கு இருக்கின்ற சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் நோக்கில் இலங்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் நல்லிணக்கம், சமாதானம் போன்ற இலக்குகளை அடைய இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு போதிய அவகாசமும் செயல்படுவதற்கான இடமும் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்தது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை இலங்கை தமது இலட்சியங்களை எட்ட உதவியாக இருக்க வேண்டுமே ஒழிய தடையாக இருக்கக்கூடாது என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 18-05-2013, 10:55.26 AM ]
பொலிஸ் தடை விதித்தாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
[ Saturday, 18-05-2013, 10:27.47 AM ]
இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிராத்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
[ Saturday, 18-05-2013, 10:25.18 AM ]
சட்டத்துக்கு முரணான வகையில் வியட்நாமிற்கு சிங்கி இறால்களை கடத்திச் செல்ல முயன்ற இருவரை  சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
[ Saturday, 18-05-2013, 10:12.22 AM ]
இன்று லண்டனில் நடைபெறும் மாபெரும் எழுச்சிப் பேரணி நேரலை மதியம் 1 மணியில் இருந்து 6 மணி வரைக்கும வெளிநாடு வாழ் ஈழத்தமிழர் வசதி கருதி நேரலையாக வெளியிடப்படுகின்றது.
[ Saturday, 18-05-2013, 09:33.43 AM ]
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல்போனதாக கூறப்பட்ட பெண், இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் எல்பிட்டிய பிட்டிகல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
[ Saturday, 18-05-2013 11:06:30 GMT ]
சிரியாவிலிருந்து துருக்கிக்கு கடத்திக் ‌கொண்டு வரப்பட்ட எரிபொருள் ஏற்றி வந்த கண்டெய்னர் வெடித்ததில் 10 பேர் பலியானதாக ஹட்டே கவர்னர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 07:24:01 GMT ]
பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்பு, உதயநிதி ஸ்டாலினிடம் ஹம்மர் காரை சிபிஐ ஒப்படைத்தது.
[ Saturday, 18-05-2013 08:48:36 GMT ]
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
[ Saturday, 18-05-2013 07:17:24 GMT ]
முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 08:38:26 GMT ]
ஸ்ரீ வள்ளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக கே. குருநாதன், பி. ஏலப்பன், எம். தர்மராஜன், பாலகிருஷ்ணன். கே ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ரம்மி” என்று பெயரிட்டுள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 17-05-2013 16:12:03 ]
எல்லோருக்கும் வணக்கம். எனது ஆய்வுத்துறை சார்ந்து பார்வையாளனாக பேசுவதற்கான எந்த முன்குறிப்புக்களும் ஆயத்தங்களும் இல்லாமல் வந்த ஒருவன் தற்போது உங்கள் முன்னால் பேசுவதற்காக நிற்கிறேன். ஆனால் பேசுவதற்கு – உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன.