சிவலிங்கத்தை அகற்றி புதையல் தோண்டிய பொலனறுவை ஆலயத்தை யோகேஸ்வரன் எம்.பி. பார்வையிட்டார்
இதில் பிரம்மா, சிவன், விஸ்ணு என்ற மும்மூர்த்திகள் அமைந்த மிகப்பெரிய லிங்கம் அமைந்த ஆலயத்துக்கு முன் உள்ள பகுதியில் உள்ள கருங்கல் சிவாலயத்திலேயே மூலஸ்தானத்தில் 3½ அடிக்கு புதையல் தேடப்பட்டுள்ளது.
இங்கு நடராஜர் விக்கிரம் இருந்திருக்க வேண்டும் என ஊசிக்க முடிகின்றது. இவ்விக்கிரகம் தற்போது பொலநறுவை தொல்பெருள் காட்சிசாலையில் உள்ளதாக அறியப்படுகின்றது.
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பொலன்னறுவையில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களையும் சென்று பார்வையிட்டதுடன் புதையல் கிண்டப்பட்ட சிவாலயத்தையும் பார்வையிட்டார்.










