திருமலை சிவன் கோவில் வீதியில் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் திருமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றிய போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் திட்டம் ஒன்றை வைத்தே செயற்படுகின்றது. வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்குப் பின்னால் அரசாங்கம் திட்டம் ஒன்றை வைத்திருக்கலாம்.
மாகாண சபைகளுக்கு அதிகாரப்பகிர்வு தேவை என்பது குறித்து மீண்டும் ஒரு முறை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருக்கின்றது.
பெரும்பான்மை இனவாதிகள் அதிகாரப்பகிர்வு தேவையில்லை, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது எனக் குரல் எழுப்புகின்றார்கள்.
இந்த நிலையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் ஆளும் கட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றினால் மாகாண சபைகளுக்காக வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மீளப்பெற்று மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்து விட்டுத்தான் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில்தான் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நாம் எதிர்கொள்கின்றோம்.
இவ்வாறு சம்பந்தன் தெரிவித்தார்.