செய்தி
தந்தையின் மரணத்திற்கு துமிந்தவே காரணம்! எதிர்காலத்தில் அரசியலில் குதிக்கவுள்ளேன்! ஹிருணிகா
[ திங்கட்கிழமை, 30 யூலை 2012, 03:49.33 AM GMT ]
முல்லேரிய சம்பவத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்ட தமது தந்தையான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மரணத்திற்கு, துமிந்த சில்வாவே பிரதான காரண கர்த்தா என சுட்டிக்காட்டியுள்ள மகளான ஹிருணிகா பிரேமசந்திர எதிர்காலத்தில் அரசியலில் குதிக்கப் போவதாகத் தெரிவித்தார்.

தமது தந்தையின் கொலை வழக்கு நிறைவடைந்த பின்னர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் முனைப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மீதான சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் பின்னர், அவருக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்து விட்டு தாம் அரசியல் பிரவேசம் செய்யவுள்ளதாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஹிருணிகா குறிப்பிட்டிருந்தார்.

எதிர்காலத்தில் அரசாங்கத்தின் சார்பாகவோ அல்லது மக்கள் கட்சியுடனோ இணைந்தே தாம் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமது தந்தையான பாரதவின் மரணத்திற்கு, துமிந்த சில்வாவே பிரதான காரண கர்த்தா என்றும் அவர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தற்போதைய நிலையில். தாம் அரசியலில் இறங்குவது தமக்கு பாதகமான விளைவுகளை தோற்றுவிக்கும் என்றும் ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், தமது தந்தையை கொல்வதற்கு எதிர்கட்சிகளாக ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி என்பவற்றின் சதித்திட்டங்கள் முன்னர் செயற்படுத்தப்பட்டன.

இருந்தபோதும், அவர் துர்அதிர்ஷ்ட வசமாக சொந்த கட்சியில் உள்ள ஒருவராலேயே கொல்லப்பட்டமை வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.

தாம் நீதிமன்ற உத்தரவு வரும் வரையிலும் காத்திருப்பதாகவும், அதன் பின்னர் தமது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசியல் எந்த நோக்கத்துடன் களமிறங்குவது என்பது குறித்து அதைத் தொடர்ந்தே தீர்மானிக்கவுள்ளதாகவும், ஹிருணிகா பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர தெரிவித்துள்ளார்..


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 20-05-2013, 07:14.41 AM ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

[ Monday, 20-05-2013, 06:48.07 AM ]

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

[ Monday, 20-05-2013, 06:23.37 AM ]
மோசமாக சேதமடைந்துள்ள வீதியை திருத்தித் தரக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களை, இலங்கையின் புனர்வாழ்வு அமைச்சர் குணரத்ன வீரக்கோன் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளார்.
[ Monday, 20-05-2013, 06:11.26 AM ]
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், அவர் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Monday, 20-05-2013, 05:59.16 AM ]
ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என தொழிலாளர் தேசிய காங்கிரஸின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
[ Monday, 20-05-2013 05:34:22 GMT ]
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது.
[ Monday, 20-05-2013 06:51:24 GMT ]
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
[ Monday, 20-05-2013 06:42:30 GMT ]
கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகியுள்ள தரகர்களுக்கு எராளமான உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஏஜென்ட்களாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது.
[ Monday, 20-05-2013 06:21:01 GMT ]
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான்.
[ Monday, 20-05-2013 06:33:58 GMT ]
சினிமாவில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தாலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச திருமணம், படிப்பு உதவி என்று சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 10:38:57 ]
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.