செய்தி
 Photo
தொப்புள் கொடி உறவென்று வந்தோம்! துயரத்தில் வாழ்கிறோம்! வேதனையில் மண்டபம் முகாம் அகதிகள்
[ சனிக்கிழமை, 21 யூலை 2012, 03:01.34 AM GMT ]
கள்ளத்தனமாக அவுஸ்தி​ரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற ஈழ அகதிகள் கேரள பொலிஸாரிடம் பிடிபட்டார்கள். 'அகதி முகாமில் பெண் தற்கொலை’ என்று அடிக்கடி செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

அகதி முகாம் மக்களது வாழ்க்கை நிலைமை என்ன என்பதை அறிய மண்டபம் முகாம் பற்றி விசாரித்தோம்.

மண்டபத்தில்தான், தமிழகத்திலேயே பெரிய அகதிகள் முகாம் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலம் தொடங்கி இயங்கிவருகிறது.

ஈழப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் முதலில் வந்து சேர்வது, இங்கேதான். இங்கே இருந்துதான் தமிழகம் முழுக்க உள்ள 103 முகாம்களுக்கும் பிரித்து அனுப்பப்படுவார்கள்.

மண்டபம் அகதி முகாமில் உள்ளவர்களின் உண்மை நிலை குறித்து அறிந்து வந்திருக்கிறார் இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா. அவரிடம் பேசினோம்.

முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மாத உதவித் தொகை சரியாகக் கிடைத்துவிடுகிறது என்றாலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

நீண்டகாலமாக முகாமில் தங்கி உள்ளவர்கள் விடுமுறையில் செல்லவேண்டும் என்றாலோ, வேறு முகாம்களுக்கு மாறிச் செல்லவேண்டும் என்றாலோ, முன்பு இங்குள்ள அலுவலரிடம் கோரிக்கை வைத்தாலே போதும்.

இப்போதோ இராமநாதபுரம் கலெக்டரிடம் சென்று அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்காக அவர்கள் அடிக்கடி அலைவதால் பேருந்துக்குச் செலவு ஆவதோடு, மன உளைச்சலும் அடைகிறார்கள்.

இவர்கள் சமையல் செய்வதற்காக இலவச காஸ் சிலிண்டர்கள் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டன. தற்போது அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன. இவர்களின் அனைத்துக் குறைகளையும் முதல்வரிடம் நேரடியாகப் பேசித் தீர்க்க முயல்வேன் என்றார்.

இவரை அடுத்து அகதிகள் நிலைமை அறிவதற்காக சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த பெரியகுளம் எம்.எல்.ஏ. லாசர், மதுரை எம்.எல்.ஏ. அண்ணாதுரையுடன் மாநில, மாவட்டக்குழு நிர்வாகிகள் கிளம்பி வந்தனர்.

முகாமுக்குள் செல்ல ஏற்கெனவே அனுமதி வாங்கி இருந்த நிலையிலும், அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் இவர்களை முகாம் வாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள்.

நாங்கள் கலெக்டரிடம் அனுமதி வாங்கி இருக்கிறோம்’ என்று அவர்கள் எடுத்துச் சொல்லியும் உள்ளே விடவில்லை. அதனால் முகாம்வாசிகள் வெளியில் வரும்போது குறைகளைக் கேட்டனர்.

எம்.எல்.ஏ-க்கள் லாசர் மற்றும் அண்ணாதுரையிடம் பேசினோம்.

முகாமுக்குள் கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை. வீடுகள் மோசமாக பழுதடைந்து உள்ளன. மருத்துவ வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

தொண்டு நிறுவனம் வழங்கிய அம்புலென்ஸை அதிகாரிகள் தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச காஸ் அடுப்புகளையும் பறிமுதல் செய்துவிட்டதால், சமைக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.

முகாம் வாசிகள் கூடுதல் வருமானம் பெறுவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. மக்கள் பிரதிநிதிகளான எங்களையே முகாமுக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்றால் உள்ளே அந்த அளவுக்குச் சிக்கல் இருக்கிறது என்றுதான் அர்த்தம். இதுதான் அகதிகள் மீது தமிழக அரசு காட்டும் அக்கறை என்றனர்.

முகாமில் இருக்கும் ஓர் ஈழத்தமிழரிடம் பேசினோம்.

ஓரளவு வாழ்வதற்கு ஏற்ற குடியிருப்புகள் முன்பு இருந்தன. இப்போது எல்லாமே பழுதடைந்து விட்டன. இங்கேயே இந்த கதியென்றால் மற்ற முகாம்களைப்பற்றி ஒன்றும் சொல்ல இயலாது.

முன்னே 5,000 பேர் இங்கே இருந்தாங்க. இப்போ 2,000 பேர்தான் இருக்கோம். கட்டட வேலை, மர வேலை, கடல் தொழில் எல்லாம் தெரியும். முகாமுக்குள் அப்பப்ப சோதனை போடுறோம்னு அதிகாரிங்க அடிக்கடி வர்றதால வெளி வேலைக்குப் போக முடியலை.

தமிழ்நாட்டுக்கு முக்கிய ஆளுங்க விஜயம் செஞ்சா, எங்களை மூணு நாளைக்கு வெளியே விட மாட்டாங்க. ஒரு அவசரம்னாகூட போகமுடியாது. ஜெயில் வாழ்க்கைதான். காசுள்ள எங்க ஆட்கள் அப்பவே வெளிநாடுகளுக்குப் போயிட்டாங்க.

தொப்புள்கொடி உறவென்று தமிழகம் வந்தோம். சொல்ல முடியாத துயரத்தில் வாழ்கிறோம்.

இங்குள்ள அதிகாரிங்க எங்களை கேவலமாத்தான் பாக்குறாங்க. எப்பாவது வெளியில வேலைக்குப் போனாலும், எங்களுக்கு மட்டும் கூலியைக் கம்மியா தர்றாங்க. இப்படியே கழியுது எங்கட வாழ்க்கை என்றார் வருத்தத்தோடு.

மண்டபம் முகாம் தனித் துணை ஆட்சியரான துரையிடம் பேசினோம். நான் எதைப்பற்றியும் பேசக் கூடாது. இங்குள்ள அகதிகளுக்கு வருகைப் பதிவேடு எடுப்பது மட்டும்தான் என் வேலை. எந்த முடிவையும் சென்னையில் இருக்கும் கமிஷனர்தான் எடுக்க முடியும் என்று சொன்னார்.

நம்மிடம் பேசிய தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஐ.நா-வின் அகதிகள் மறுவாழ்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டாலே, அத்தனை உதவிகளையும் அவர்களே செய்துவிடுவார்கள். நாங்களே பார்த்துகொள்கிறோம் என்று நம் நாடு இருப்பதால்தான் இந்த நிலை.

திபெத் அகதிகள், வங்க தேச அகதிகளுக்கு எல்லாம் நிறைய சலுகைகள் கொடுக்கும் மத்திய அரசு, ஈழத்தமிழர்கள் விஷயத்தில் மட்டும் வஞ்சனை செய்கிறது என்கின்றனர்.

தேடிவந்த நாடும் சரியில்லை என்றால் நாதியற்ற மக்கள் என்னதான் செய்வார்கள்?

இவ்வாறு இவ்வார ஜூனியர் விகடன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 18-05-2013, 03:04.50 PM ]

வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்யவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவருக்கும் சிக்கல் தோன்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Saturday, 18-05-2013, 02:44.52 PM ]
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கான 4ம் ஆண்டு நினைவுப் பிரார்த்தனை மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
[ Saturday, 18-05-2013, 01:53.33 PM ]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

[ Saturday, 18-05-2013, 01:42.01 PM ]

தொழில் வாய்ப்பு பெற்று சவூதி அரேபியாவுக்குச் சென்ற 232 இலங்கையர்கள் தம்மாவில் நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

[ Saturday, 18-05-2013, 01:35.58 PM ]

இலங்கையில் நடத்தப்படுகின்ற வெற்றிவிழா கொண்டாட்டங்களால் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உள்ளங்களையும் வெற்றிக் கொள்ளும் வகையில் அமையாது என்று தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.

[ Saturday, 18-05-2013 11:06:30 GMT ]
சிரியாவிலிருந்து துருக்கிக்கு கடத்திக் ‌கொண்டு வரப்பட்ட எரிபொருள் ஏற்றி வந்த கண்டெய்னர் வெடித்ததில் 10 பேர் பலியானதாக ஹட்டே கவர்னர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 11:16:26 GMT ]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
[ Saturday, 18-05-2013 15:23:29 GMT ]
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் தொடரின் 70வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
[ Saturday, 18-05-2013 07:17:24 GMT ]
முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 15:05:32 GMT ]
பல வித்தியாசமான படங்களை இயக்கிய வசந்த் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்திருக்கும் திரைப்படம் தான் மூன்று பேர் மூன்று காத‌ல்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 17-05-2013 16:12:03 ]
எல்லோருக்கும் வணக்கம். எனது ஆய்வுத்துறை சார்ந்து பார்வையாளனாக பேசுவதற்கான எந்த முன்குறிப்புக்களும் ஆயத்தங்களும் இல்லாமல் வந்த ஒருவன் தற்போது உங்கள் முன்னால் பேசுவதற்காக நிற்கிறேன். ஆனால் பேசுவதற்கு – உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன.