செய்தி
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் புதுவை கல்வி மாநாட்டிற்கான ஆரம்ப ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி
[ சனிக்கிழமை, 21 யூலை 2012, 07:26.04 AM GMT ]
இந்தியாவின் புதுச்சேரியில், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் நடத்தவுள்ள உலக கல்வி மாநாட்டிற்கான ஆரம்ப ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம், இயக்கத்தின் புதுச்சேரி கிளையின் ஆதரவோடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ம், 25ம், 26ம் திகதிகளில் இம்மாநாட்டினை நடத்தவுள்ளதாக உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம், இயக்கத்தின் கல்விப் பொறுப்பாளர் கனடா வாழ் வி. ஏஸ். துரைராசா மற்றும் இயக்கத்தின் சர்வதேச ஊடகத்துறை பொறுப்பாளர் கனடா வாழ் ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டு அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:-

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கம் கடந்த 37 வருடங்களாக தமிழ்மொழி, தமிழிலக்கியம், பண்பாடு போன்ற விழுமியங்களை உலகெங்கும் பரப்பி வருகின்றனது.

இதுவரை 11 சர்வதேச மாநாடுகளை நடத்திய அனுபவங்களோடும் தொடர்புகளோடும் பல நாடுகளில் கிளைகளை அமைத்து வெற்றிகரமாக இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம், தற்போது தமிழ் கல்வி மற்றும் தமிழ் மொழியைக் கற்பித்தல் போன்ற விடயங்களில் அதிக ஈடுபாட்டையும் அதன் மூலம் ஏற்படவுள்ள உலகத் தமிழர்களின் எதிர்கால நலன் கருதியும் மேற்படி கல்வி மாநாட்டை நடத்த தீர்மானித்து. அதன் ஏற்பாடுகளை வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது.

இந்த வகையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 24ம், 25ம், 26ம் திகதிகளில் இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான புதுச்சேரியில் உலக கல்வி மாநாட்டை தீர்மானித்து, அதன் பெரும் பொறுப்புக்களை இயக்கத்தின் புதுச்சேரிக் கிளையிடம் ஒப்படைத்தது.

மேற்படி கல்வி மாநாடு தொடர்பாக இயக்கத்தின் கல்விப் பொறுப்பாளர் கனடா வாழ் வி. ஏஸ். துரைராசா மற்றும் இயக்கத்தின் சர்வதேச ஊடகத்துறை பொறுப்பாளர் கனடா வாழ் ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகிய இருவரும் இயக்கத்தின் அகிலத் தலைவர் வேல் வேலுப்பிள்ளை, செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் ஆகியோரின் பணிப்பின் பேரில், கடந்த மாதம் புதுச்சேரி சென்று அங்கு இயங்கிவரும் புதுச்சேரிக் கிளையின் முக்கிய உறுப்பினர்களான தலைவர் ந. மு. தமிழ்மணி செயலாளர் சி. அமலன். பொருளாளர் ந. செங்கதிர் ஆகியோரைச் சந்தித்து இரண்டு நாட்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி மாநாட்டை புதுச்சேரியில் நடத்துவது என தீர்மானித்தனர்.

எதிர்வரும் ஆகஸ்டில் நடைபெறவுள்ள மாநாட்டின் முக்கிய கருப்பொருளாக, அயல்நாடுகளில் தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் துறைகளில் நமது மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பு எடுத்துக்கொள்ளப்படும்.

மேற்படி மூன்று நாள் மாநாடானது தொடக்கவிழா, ஆய்வரங்குகள், மலர் வெளியீடு, கலை நிகழ்ச்சிகள் மற்றும் நிறைவு விழா ஆகியவை உள்ளடங்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பதிவு கொண்டதாக அமையவுள்ள இந்த மூன்று நாள் கல்வி மாநாட்டில் முக்கிய விருந்தினர்களாக புதுச்சேரி மாநில முதல்வர் ந. அரங்கசாமி, இந்திய மத்திய தகவல் மற்றும் செய்தித்துறை இணை அமைச்சர் சா. சேகத்ரட்சகன், புதுச்சேரி உள்ளாட்சித்துறை அமைச்சர் பன்னீர்ச் செல்வம், புதுச்சேரி சட்டப் பேரவை தலைவர் சபாபதி, சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் க. திருவாசகம், எஸ். ஆர்.எம் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்ன வைக்கோ, தஞ்சை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒளவை நடராசன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் க. ப. அறவாணன், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொற்கோ. சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் அரங்க இராமலிங்கம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் கல்வித்துறையின் தலைவர் பேராசிரியர் சோ. சந்திரசேகரம், கொழும்பு வீரகேசரி வாரப் பதிப்புகளின் பிரதம ஆசிரியர் தேவராசா ஆகியோர் பங்கு கொள்ளவுள்ளனர்.

மேலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அவுஸ்திரேலியா, பிரான்சு, பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, தென்ஆபிரிக்கா, நோர்வே, டென்மார்க், மொரிசியஸ் தீவு, நியுசிலாந்து மற்றும் சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பேராளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆய்வரங்கில் பங்கு கொள்ள விரும்பும் பேராளர்கள் தத்தம் நாடுகளில் தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய துறைகளில் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்த விடயங்களை உள்ளடக்கி ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் விடயங்களையும் உள்ளடக்கிய மாநாட்டுச் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. இந்த மலரில் தங்கள் ஆக்கங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற வேண்டும் என்று விரும்பும் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள், தங்கள் படைப்புக்களை, சிறப்பு மலர் பொறுப்பாளர் இரா மதிவாணன், அவர்களது விலாசத்திற்கு 08-08-2012 என்னும் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கலாம்.

அவரது தபால் முகவரி பின்வருமாறு:- Mr.Raa Mathvaanan, No:4 Sourashtra Nagar, 7th Street, Choolaimedu, Chennai 600 094, India மேலும், மலருக்கு கட்டுரைகளையும் படைப்புக்களையும் மின்அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புவோர பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்பலாம். reramathi@gmail.com, raja@cfsginc.com , imtc1974@yahoo.com .

இவ்வாறு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 18-05-2013, 03:04.50 PM ]

வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்யவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவருக்கும் சிக்கல் தோன்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Saturday, 18-05-2013, 02:44.52 PM ]
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கான 4ம் ஆண்டு நினைவுப் பிரார்த்தனை மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
[ Saturday, 18-05-2013, 01:53.33 PM ]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

[ Saturday, 18-05-2013, 01:42.01 PM ]

தொழில் வாய்ப்பு பெற்று சவூதி அரேபியாவுக்குச் சென்ற 232 இலங்கையர்கள் தம்மாவில் நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

[ Saturday, 18-05-2013, 01:35.58 PM ]

இலங்கையில் நடத்தப்படுகின்ற வெற்றிவிழா கொண்டாட்டங்களால் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உள்ளங்களையும் வெற்றிக் கொள்ளும் வகையில் அமையாது என்று தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.

[ Saturday, 18-05-2013 11:06:30 GMT ]
சிரியாவிலிருந்து துருக்கிக்கு கடத்திக் ‌கொண்டு வரப்பட்ட எரிபொருள் ஏற்றி வந்த கண்டெய்னர் வெடித்ததில் 10 பேர் பலியானதாக ஹட்டே கவர்னர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 11:16:26 GMT ]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
[ Saturday, 18-05-2013 15:23:29 GMT ]
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் தொடரின் 70வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
[ Saturday, 18-05-2013 07:17:24 GMT ]
முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 15:05:32 GMT ]
பல வித்தியாசமான படங்களை இயக்கிய வசந்த் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்திருக்கும் திரைப்படம் தான் மூன்று பேர் மூன்று காத‌ல்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 17-05-2013 16:12:03 ]
எல்லோருக்கும் வணக்கம். எனது ஆய்வுத்துறை சார்ந்து பார்வையாளனாக பேசுவதற்கான எந்த முன்குறிப்புக்களும் ஆயத்தங்களும் இல்லாமல் வந்த ஒருவன் தற்போது உங்கள் முன்னால் பேசுவதற்காக நிற்கிறேன். ஆனால் பேசுவதற்கு – உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன.