குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள், திருக்கோணமலை நிலாவெளி கடற்பிராந்தியத்தில் நேற்றிரவு பயணித்துக் கொண்டிருந்த போதே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படைப் பேச்சாளர் பிரிகேடியர் கோசல வர்ணகுலசூரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் 41 தமிழர்கள், முஸ்லிம்கள் ஐவர் மற்றும் சிங்களவர்கள் 7 பேர் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இவர்களில் இருவர் பெண்கள் என்பதுடன், கைதான அனைவரும் திருக்கோணமலை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு மற்றும கிளிநொச்சி பிரதேசதங்களைச் சேர்ந்தவர்கள் என கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைத செய்யப்பட்ட அனைவரும் தற்போது திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்த மாதத்தில் மாத்திரம் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா நோக்கிச் சென்றவர்களின் எண்ணிக்கை 454 ஆக அதிகரித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.