சிங்களப் பேரினவாதத்தால் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனவழிப்பிலும், 1948 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தொடரும் இனக் கருவறுப்பிலும் கோரப் பலியாகிய எங்கள் உறவுகளை நினைவுகூருமுகமாக “கறுப்பு யூலை நினைவும் கவனயீர்ப்பும்" நிகழ்வு இன்று டென்மார்க்கில் நடைபெற்றுள்ளது.
டென்மார்க்கின் Aarhus மற்றும் Odense ஆகிய நகரங்களில் டென்மார்க் தமிழர் பேரவையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் 'கறுப்பு யூலை" இனவழிப்பை விளக்கும் பெருமளவான துண்டுப் பிரசுரங்கள், அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறைச்சாலையில் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் தொடர்பாக, ஏற்கெனவே டென்மார்கிலுள்ள ஐரோப்பிய ஆணையப் பிரதிநிதித்துவத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த அறிக்கைகளும் டென்மார்க் நாட்டு மக்களுக்கு பெருமளவில் வழங்கி, விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் டென்மார்க் தமிழர்கள் ஒன்றுகூடி, சிங்களப் பேரினவாதத்தால் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்புக்கு கோரப் பலியாகிய அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூர்ந்தனர்.




