செய்தி
இலங்கையில் சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு! 63 நாடுகளுக்கு அழைப்பு! 19 நாடுகள் இணக்கம்
[ சனிக்கிழமை, 21 யூலை 2012, 10:50.02 AM GMT ]
இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்களில் கலந்துகொள்ள 19 நடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. 63 நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் இதில் 19 நாடுகள் கருத்தரங்கில் கலந்து கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

'நிலையான சமாதானமும், ஸ்திரதன்மையும் என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, பங்களாதேஷ், பிரேஸில், சீனா, ஈரான், ஈராக், மலேசியா, மாலைதீவு, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், தாய்லாந்து, நெதர்லாந்து, புரூனை, கென்யா, சவூதி அரேபியா, உகண்டா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் இந்த மாநாடு கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இராணுவ உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், வெளிநாட்டு பாதுகாப்பு நிபுணர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ளனர்.

இந்த மாநாட்டில் பிரதம உரையை இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 19-05-2013, 06:31.49 PM ]
பிரதமர் கமரூன் அவர்களே இலங்கை செல்ல வேண்டாம், இலங்கையே இனப்படுகொலையை நிறுத்து என லண்டன் வீதிகளில் திரண்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் முழங்கினார்கள்.
[ Sunday, 19-05-2013, 05:47.19 PM ]
பட்டம் பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்து செயற்படமாட்டேன். அமைச்சுப் பதவிகளை தூக்கி எறியும் சந்தர்ப்பம் வந்தால் அதையும் செய்ய தவறமாட்டேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
[ Sunday, 19-05-2013, 04:27.36 PM ]
தமிழர் தேசத்தினை போரில் வெற்றி கொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.
[ Sunday, 19-05-2013, 04:04.33 PM ]
ஏறாவூர், மைலம்பாவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழரை மணியளவில் இவ்விபத்து நேரிட்டுள்ளது.
[ Sunday, 19-05-2013, 03:59.33 PM ]
கணினி உதவியுடன் போலி நாணய தாள்களை அச்சிடும் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Sunday, 19-05-2013 16:41:23 GMT ]
ஐ.நா. சபை செயலாளர் பான் கி-மூன் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
[ Sunday, 19-05-2013 06:22:12 GMT ]
கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
[ Sunday, 19-05-2013 18:28:21 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 72வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Sunday, 19-05-2013 06:44:43 GMT ]
ஒன்லைன் மின் (eBooks) புத்தகங்களின் சங்கமமாகத் திகழும் Google Play Books சேவையானது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
[ Sunday, 19-05-2013 17:30:09 GMT ]
தமிழில் நடிப்பதை விட்டுவிட்டு நான் தெலுங்கு, இந்தியில் மட்டுமே கவனம் செலுத்துவதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்று கூறியுள்ளர் நடிகை ஸ்ருதிஹாசன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 07:33:38 ]
மூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்றோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன.