முன்மாதிரியாகச் செயற்பட்ட இராணுவ வீரர் பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவினால் நேற்று வெள்ளிக்கிழமை கௌரவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நகைகளை வங்கியில் அடகு வைத்து பெற்றுக் கொண்ட 41 ஆயிரம் ரூபா பணம் மற்றும் அதற்குரிய பற்றுக் சீட்டுக்களையும் வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் இதனை திருநெல்வேலி பகுதியில் தவறவிட்டுள்ளர்.
அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த 5வது இலங்கை காலாற்படைப் பிரிவைச் சேர்ந்த கோப்ரல் ஈ எம். டிக்கிரி பண்டா என்பவரால் குறித்த பெண்மணியின் பணம் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பையினை கண்டெடுத்து தனது கட்டளை அதிகாரி மூலமாக படையணித் தலைமையகத்தின் தளபதியிடம் கையளித்துள்ளார்.
இப்பணத்தையும் ஆவணங்களையும் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க குறித்த பெண்மணியிடம் நேற்று வெள்ளிக்கிழமை கையளித்தார்.
அதேவேளை, இராணுவ வீரரின் இந்தச் செயலை பாராட்டி அவருக்கு யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க பரிசையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார்.