செய்தி
லண்டன் ஒலிம்பில் போட்டியில் இரு இலங்கையர்கள் தோல்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூலை 2012, 01:27.20 PM GMT ]
லண்டன் ஒலிம்பில் போட்டியில் இன்று பங்குகொண்ட இரண்டு இலங்கை போட்டியாளர்களும் தோல்வியடைந்தனர்.

இலங்கையின் நீச்சல் வீரர், ஹெஷான் உனம்புவ ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர் பின்னால் நீந்தும் போட்டியில் கலந்து கொண்டிருந்தார். இந்த சுற்றில் ஹெஷானுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.

இதன்பொருட்டு அவர் 57.94 நொடிகளை செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபடோசின் நீச்சல் வீரர் 56.7 நொடிகளில் போட்டி முடிவை அடைந்து முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.

எனினும், இலங்கை வீரர் ஹெஷானுக்கு அரையிறுதியில் பங்கு பற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதேவேளை, பெட்மின்டன் போட்டியின் முதல் சுற்றியில் இலங்கை வீராங்கணை திலினி ஜயசிங்க பங்குபற்றினார்.

அவருக்கு எதிராக தாய்லாந்து வீராங்கனையொருவர் போட்டியிட்டிருந்தார். எனினும், முதல் சுற்றில் திலினி தோல்வியடைந்தார். அந்த சுற்றில் 21 க்கு 5 மற்றும் 21 க்கு 13 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீராங்கனை வெற்றி பெற்றார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 12:53.50 AM ]
இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதால் மப்பும் மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை ஏற்பட்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
[ Tuesday, 21-05-2013, 12:39.41 AM ]
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் எவ்வளவு குறைப்பாடுகள் இருந்தாலும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாகவே புலிகளின் கிழக்கு மாகாண தளபதியை பிரிக்கமுடிந்தது. என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 21-05-2013, 12:11.24 AM ]
மட்டக்களப்பின் நீண்ட கால கனவாக இருந்த தனித்துவமான தொலைக்காட்சி தனது சேவையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளது. மட்டுஒளி என்ற நாமத்துடன் இந்த சேவை மட்டக்களப்பு பூம்புகாரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
[ Tuesday, 21-05-2013, 12:04.07 AM ]
உடையார்கட்டு தமிழ் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நேற்று (20.05.2013)  காலை 7 மணியளவில் பாடசாலையை நோக்கி சென்று கொண்டிருந்த வேளை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.
[ Monday, 20-05-2013, 11:57.00 PM ]
கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
[ Monday, 20-05-2013 18:17:36 GMT ]
ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கும் குறைவாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே சமய நம்பிக்கையில் வேறுபாடு காரணமாக மோதல்கள் நடந்து வருகின்றன.
[ Monday, 20-05-2013 08:18:32 GMT ]
திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 20-05-2013 15:22:03 GMT ]
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.
[ Monday, 20-05-2013 07:13:25 GMT ]
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம்.
[ Monday, 20-05-2013 14:10:57 GMT ]
கொலிவுட்டில் நா‌ர்‌த்‌ ஈஸ்‌ட்‌ பி‌லி‌ம்‌ பே‌க்‌டரி‌ மற்‌றும்‌ ரங்‌கீ‌லா‌ எண்‌டர்‌பி‌ரை‌சஸ்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌த்‌துள்‌ள படம்‌ உன்‌ வருகை‌க்‌கா‌க லா‌லி‌.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.