செய்தி
திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட பௌத்த பிக்கு கைது
[ புதன்கிழமை, 11 யூலை 2012, 02:57.08 PM GMT ]

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பௌத்த பிக்குவிற்கு எதிராக, வேறு பெயர் ஒன்றில் பதிவுத் திருமணம் செய்து கொண்டமை, சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டமை மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

வெல்லாவ ஹிரிபிட்டியே தர்மசந்திர பிரிவெனவின் பிரதிப் பணிப்பாளர் தம்ம விசுத்தி தேரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட போது போலியான ஆவணங்களைக் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மனைவியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போது கிராம மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் குறித்த பௌத்த பிக்குவை ஒப்படைத்துள்ளனர்.

குறித்த பௌத்த பிக்குவிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 10:08.13 AM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு, காதில் ஏற்பட்ட நோய்க்குச் சிகிச்சை பெறச் சென்ற குடும்பப் பெண் ஒருவரை வைத்தியசாலை டாக்டர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
[ Wednesday, 19-06-2013, 10:08.06 AM ]
இந்திய மத்திய அரசின் கருத்துகள், இந்திய அரசு தலைவர்கள் வழங்கிய உறுதிப்பாடுகள் என மன்மோகன் சிங் சொன்னார், சோனியா சொன்னார் என கூட்டமைப்பு எம்பிக்கள் ஊடகங்கள் மூலமாக சொல்கின்றார்கள். கூட்டமைப்பு எம்பிக்களுடன் ஆளும் இந்திரா காங்கிரஸ் தலைவர், இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரது அழகான படங்களும் ஊடகங்கள் மூலமாக காட்டப்படுகின்றன.
[ Wednesday, 19-06-2013, 09:30.22 AM ]
தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடர்ச்சியான இனவழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள இனவெறியாளர்களின் ஆட்சியரங்காகவுள்ள சிறிலங்காவினை புறக்கணிக்கக் கோரி, புலம்பெயர் தமிழீழ மாணவர்களினால் கடந்த 17ம் திகதி ஓவல் துடுப்பாட்ட மைதானம் முன்பாக ஒழுங்கு செய்யப்பட்ட அமைதி வழியான கவனயீர்ப்புப் போராட்டம் சிங்கள இனவெறியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான வன்முறைத் தாக்குதலுக்குள்ளானது.
[ Wednesday, 19-06-2013, 08:47.13 AM ]

திறந்த பல்கலைக்கழக பெண் பேராசிரியர் ஒருவர் மீது மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Wednesday, 19-06-2013, 07:37.19 AM ]
இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[ Wednesday, 19-06-2013 10:48:27 GMT ]
தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான நபர்களின் விபரங்களை அமெரிக்க கேட்டுள்ளதாக யாகூ நிறுவனம் அறிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 06:25:26 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவும், இங்கிலாந்தும் இன்று மோதுகின்றன.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.