செய்தி
 Photo
டெசோ மாநாட்டின் தலைப்பிலிருந்து “ஈழம்” என்ற சொல்லை அகற்றினால் மட்டுமே இந்திய அமைச்சின் அனுமதி கிடைக்கும்
[ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 02:54.48 AM GMT ]
தமிழ் ஈழத்திற்கு ஆதரவு வழங்கும் அமைப்பு என்னும் கருணாநிதியின் டெசோ அமைப்பு தனது பெயரிலிருந்து ஈழம் என்ற சொல்லை அகற்றினால் மட்டுமே மேற்படி மாநாட்டிற்கான இந்திய உள்துறை அமைச்சின் அனுமதி கிடைக்கும்.

ஆனாலும் அரசியல் ரீதியாக பார்க்கையில், மேற்படி மாநாட்டை வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்து நடத்துவதில் இந்திய அரசுக்கு ஆட்சேபனை எதுவுமில்லை.

இவ்வாறு அரசாங்கத்தின் சார்பாக, இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதிச் செயலாளர் திரு ஆர். கே. நாக்பால் என்பவர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியான அங்கீகாரம் என்ற தலைப்பில் மேற்படி கடிதம் டெசோ அமைப்பின் செயலாளர் ஹசன் மொகமெட் ஜின்னாவின் பெயருக்கு கலைஞரின் அண்ணா அறிவாலயம் என்னும் விலாசத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேற்படி கடிதம் 9ம் திகதியில் அனுப்பப்பட்ட படியால் மேற்படி மாநாட்டை நடத்துவதில் கலைஞர் கருணாநிதியும் என்னென்ன சவால்களை எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 26-05-2013, 04:07.05 AM ]
போருக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த போராளிகளில் பலர் புகலிடம் கோரி வெளிநாட்டுத் தூதரகங்களை நாடுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது என்று அறியவருகின்றது.
[ Sunday, 26-05-2013, 03:34.32 AM ]
டொமினிக் குடியரசில் வைத்து அண்மையில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்த தகவல்கள் இன்னும் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
[ Sunday, 26-05-2013, 03:27.30 AM ]

இலங்கையில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார்.

[ Sunday, 26-05-2013, 03:26.12 AM ]
ஈரான் மீதான தடைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Sunday, 26-05-2013, 03:05.37 AM ]

 இலங்கையில் பொலிசாரின் எதிர்ப்புக்கும் மத்தியில், 1000 குதிரைவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களை சாதாரண பாதைகளில் செலுத்த அனுமதி வழங்கப்படவுள்ளது.

[ Sunday, 26-05-2013 04:52:23 GMT ]
துருக்கி தலைநகர் அங்காரா பாதாள ரயிலில் முத்தமிட்டுக்கொண்டு செல்லும் ஜோடிகளின் காட்சிகள் ரகசியக் கமெராக்களில் நிறைய பதிவாகியிருந்தன.
[ Sunday, 26-05-2013 04:15:41 GMT ]
டிவி அருகே வைத்திருந்த கோழி முட்டையிலிருந்து, குஞ்சு வெளியே வந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
[ Sunday, 26-05-2013 02:44:35 GMT ]
ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் சாம்பியன் கிண்ணம் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்றாகும்.
[ Sunday, 26-05-2013 04:47:35 GMT ]
மின்சாரம் பற்றாக்குறையாத இருக்கும் இந்த காலத்தில் சூரிய சக்தி மின்சாரம் தான் உலகின் பல இடங்களுக்கு மின் உற்பத்தி கொடுத்து கொண்டிருக்கிறது எனலாம்.
[ Saturday, 25-05-2013 19:40:13 GMT ]
ஸ்ரீகாந்த், சுனைனா நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக  நடிக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.