செய்தி
 Photo
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரை கையில் பச்சை குத்திய சென்னை தமிழர்!
[ சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2012, 11:04.58 AM GMT ]
என்னிடம் இருந்து பிரிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பெயரைத் தனது கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த உணர்வாளர் க.சி.வாசன்.

சென்னையில் அய்யன் திருவள்ளுவர் தானி ஓட்டுனர் சங்கத்தை உருவாக்கியவர் க.சி.வாசன்.

ஆட்டோ என்பதன் சரியான தமிழ் பதம் தானி (தானியங்கி-auto).

இவரது தானிக்கு (ஆட்டோ) தனிச் சிறப்பு உண்டு.

தானி எங்கும் தமிழரின் குரலாகத் தமிழ் தேசிய அடையாளங்கள், வாசகங்கள். வெளியில், முத்துக்குமரன். திருவள்ளுவர் படங்கள், உள்ளே பிரபாகரன் படம் என்று இருக்கும்.

பயணிகள் பலரும் உள்ளே ஏறியவுடன் ஒலிக்கும் பாடல் 'வருவாண்டா பிரபாகரன்' என்னும் பாடல் தான்.

தானியில் தமிழ் ஈழ தேசிய, தமிழர் எழுச்சிப் பாடல்கள் தான் ஓடிக் கொண்டிருக்கும். இதில் பயணம் செய்பவர்களுக்கு, இறங்கும் போது கொஞ்சம் தமிழ் உணர்வையும் ஊட்டி விடுகிறார் வாசன்.

மேலும் இவர் தனது குழந்தைகளுக்குத் தூய தமிழ் பெயர்களை வைத்துள்ளார்.

தமிழ் தேசியம் என்ற கருத்தில் ஆழமாக வேரூன்றிய வாசன், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நமது இனத்தின் தலைவர்.

விடுதலைப் புலிப்படை நமது இனப் பாதுகாவலர்கள். இவர்களைத் தமிழர்களிடம் இருந்து எந்த அரசியல் சக்தியாலும் பிரிக்க முடியாது என்கிறார்.

தமிழர் அடையாளங்களை, தலைவர்களை வெளியே பகிரங்கமாக பயன்படுத்துங்கள்.

அனைவரும் அறியும்படி செய்யுங்கள். யாருக்கும் பயப்பட வேண்டாம், அரசுக்கும் அஞ்ச வேண்டாம்.

நாம் தமிழர் என்பதில் கர்வம் கொள்வோம் என்கிறார் வாசன்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 03:11.54 AM ]
அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் இன்று ஒரு மணிநேர அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது.
[ Wednesday, 19-06-2013, 02:58.49 AM ]

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

[ Wednesday, 19-06-2013, 02:51.32 AM ]

வடமாகாணம் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

[ Wednesday, 19-06-2013, 02:43.42 AM ]

ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

[ Wednesday, 19-06-2013, 02:38.55 AM ]

இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் மௌனமாக இருப்பதால், இலங்கைக்கு பிழையான செய்தியை அனுப்பும் என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

[ Wednesday, 19-06-2013 03:29:20 GMT ]
2008ம் ஆண்டு மும்பை தாக்குதலை திட்டமிட்டு நிறைவேற்றிய தீவிரவாத இயக்கத்திற்கு பாகிஸ்தான் அரசு ரூ.6 கோடி நிதி வழங்கியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 03:34:30 GMT ]
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் இருந்து சுமார் 150 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அல்வர் பொலிஸ் நிலையத்தில் 15 வயது சிறுமியின் தந்தை நேற்று ஓர் புகார் மனுவினை அளித்தார்.
[ Wednesday, 19-06-2013 03:42:01 GMT ]
ஒருநாள் சர்வதேச போட்டி அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன கடந்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 18-06-2013 13:26:49 GMT ]
கொலிவுட்டில் தனுஷ், பார்வதி ஜோடியாக நடிக்கும் ‘மரியான்’ படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.