ஜனாதிபதியின் தலைமையில் வவுனியாவில் இடம்பெற்ற வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்!
வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது,
இதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை தாங்க அமைச்சர்கள் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.
எனினும் இவ்விரு மாவட்டங்களிலுமுள்ள மக்களுடைய பிரச்சினைகள் குறித்து எந்த விடயங்களும் பேசப்படவில்லை. பேசப்பட்ட ஒரு சில விடயங்களும் மூடி மறைக்கப்பட்ட நிலையில் வீதிகளின் புனரமைப்புக் குறித்தும், மீள்குடியேற்றம் குறித்தும் பேசப்பட்டது.
ஆனால் மன்னாரிலுள்ள நீதிமன்ற விவகாரம், மற்றும் சன்னார் கிராமத்திலிருந்து மக்கள் துரத்தப்பட்ட விவகாரம் குறித்து எந்த விடயமும் பேசப்படவில்லை.
மேலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பகுதியில் மக்களிற்கான அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் எந்த விடயமும் பேசப்படவில்லை.
இந்நிலையில் புனரமைக்கப்பட்ட வீதிகள் குறித்தும், மீள்குடியேற்றப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட ஒருசில இடங்கள் குறித்தும் மட்டும் பேசி பெருமைப்பட்டுக் கொண்டு கூட்டம் நிறைவடைந்தது.



