செய்தி
இலங்கையில் 5 லட்சம் பேருக்கு சிறைத் தண்டனை!
[ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 08:39.32 AM GMT ]
இலங்கையில் 2011 ஆம் ஆண்டு தகவலின்படி சுமார் 5 லட்சம் பேர் வரை ஏதாவது காரணத்திற்காக, ஒரு தடவையேனும் தண்டனை பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள 4 சதவீதமானவர்களுக்கே சட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  அனைத்து அரச பிரிவுகளும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணம்  என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குற்ற வழக்குகள் தொடர்பில் சட்டம் செயற்படுத்தப்படும் வீதம் 75 எனவும் ஐரோப்பாவில் அது 85 வீதம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் சேவை,  அரச சேவை, சட்டம் ஆகியவற்றில் அதிகாரம் வாய்ந்தவர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திறமைவாய்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச ஊழியர்கள் இருந்தும் அரசியல் பலத்துடன் செயற்படும் நபர்களுக்கு பதவி உயர்வு, நியமனம் என்பவை வழங்கப்பட்டு முழு அரச சேவையும் வீணடிக்கப்பட்டுள்ளதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 20-05-2013, 06:48.07 AM ]

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

[ Monday, 20-05-2013, 06:23.37 AM ]
மோசமாக சேதமடைந்துள்ள வீதியை திருத்தித் தரக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களை, இலங்கையின் புனர்வாழ்வு அமைச்சர் குணரத்ன வீரக்கோன் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளார்.
[ Monday, 20-05-2013, 06:11.26 AM ]
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், அவர் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Monday, 20-05-2013, 05:59.16 AM ]
ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை என தொழிலாளர் தேசிய காங்கிரஸின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
[ Monday, 20-05-2013, 05:54.12 AM ]
யுத்த வெற்றியைக் கொண்டாடும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் பராமுகமாய் உள்ளது. ஆகவே சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது மேலும் வலுவாக்கப்பட வேண்டுமென்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
[ Monday, 20-05-2013 05:34:22 GMT ]
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது.
[ Monday, 20-05-2013 01:45:19 GMT ]
காதல் திருமணம் செய்த சென்னை பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 20-05-2013 06:42:30 GMT ]
கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகியுள்ள தரகர்களுக்கு எராளமான உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஏஜென்ட்களாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது.
[ Monday, 20-05-2013 06:21:01 GMT ]
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான்.
[ Monday, 20-05-2013 06:33:58 GMT ]
சினிமாவில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தாலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச திருமணம், படிப்பு உதவி என்று சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 10:38:57 ]
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.