இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு விடயங்கள் குறித்து, இலங்கை அதிகாரிகளுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்துள்ள 'சமாதானமும் அதன் நிலைப்பாடும்" என்ற தொனிப் பொருளில் இடம்பெறவுள்ள மாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
பாகிஸ்தானிய பாதுகாப்பு செயலாளருடன், பாகிஸ்தானிய உயர் மட்ட இராணுவ அதிகாரிகளும் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
இந்த பாதுகாப்பு மாநாட்டில், பாகிஸ்தானில் இராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்கள், தமது உபகரணங்களினை கண்காட்சிப் படுத்தவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்து,பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே சிறந்த ஒத்துழைப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
எந்தவொரு முக்கியமான தருணங்களிலும் இலங்கையும், பாகிஸ்தானும் தமக்கிடையில் தொன்று தொட்டு பரஸ்பரம் உதவிகளை புரிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த யுத்த காலத்திலும் பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கி உதவியிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.