செய்தி
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவன் நித்திரையில் உயிரிழப்பு! அம்பாறையில் சம்பவம்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 12:54.28 AM GMT ]
நேற்று நாடெங்கிலும் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு சமுகமளிக்க வேண்டிய மாணவன் நித்திரையிலேயே உயிரிழந்த பரிதாபமான சம்பவமொன்று அம்பாறை மாவட்டம், சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் சம்மாந்துறை முழுவதும் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்மாந்துறை சென்னெல் சாஹிராவில் கல்வி கற்ற முகம்மட் இஸ்மாயில் ஆசிக் (19)  எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கருவாட்டுக்கல் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த இம்மாணவன் நேற்று முன்தினம் மாலை நோன்பு துறந்ததும் உணவருந்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார்.

மறுநாள் அதிகாலை நோன்பு பிடிப்பதற்காக இம்மாணவனை எழுப்பிய போதே அவர் இறந்திருந்தது தெரியவந்துள்ளது.

மரண விசாரணைகள் பொலிஸ் புலனாய்வு பொறுப்பதிகாரி அமரசிறி, பொலிஸ் பரிசோதகர் காதர் ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

பிரேத பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர்கள் உணவு ஒவ்வாமை காரணமாகவே இம்மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 18-05-2013, 11:55.41 AM ]
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Saturday, 18-05-2013, 10:55.26 AM ]
பொலிஸ் தடை விதித்தாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
[ Saturday, 18-05-2013, 10:27.47 AM ]
இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிராத்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
[ Saturday, 18-05-2013, 10:25.18 AM ]
சட்டத்துக்கு முரணான வகையில் வியட்நாமிற்கு சிங்கி இறால்களை கடத்திச் செல்ல முயன்ற இருவரை  சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
[ Saturday, 18-05-2013, 10:12.22 AM ]
இன்று லண்டனில் நடைபெறும் மாபெரும் எழுச்சிப் பேரணி நேரலை மதியம் 1 மணியில் இருந்து 6 மணி வரைக்கும வெளிநாடு வாழ் ஈழத்தமிழர் வசதி கருதி நேரலையாக வெளியிடப்படுகின்றது.
[ Saturday, 18-05-2013 11:06:30 GMT ]
சிரியாவிலிருந்து துருக்கிக்கு கடத்திக் ‌கொண்டு வரப்பட்ட எரிபொருள் ஏற்றி வந்த கண்டெய்னர் வெடித்ததில் 10 பேர் பலியானதாக ஹட்டே கவர்னர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 11:16:26 GMT ]
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
[ Saturday, 18-05-2013 11:42:53 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட்பிக்சிங் முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
[ Saturday, 18-05-2013 07:17:24 GMT ]
முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 08:38:26 GMT ]
ஸ்ரீ வள்ளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக கே. குருநாதன், பி. ஏலப்பன், எம். தர்மராஜன், பாலகிருஷ்ணன். கே ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ரம்மி” என்று பெயரிட்டுள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 17-05-2013 16:12:03 ]
எல்லோருக்கும் வணக்கம். எனது ஆய்வுத்துறை சார்ந்து பார்வையாளனாக பேசுவதற்கான எந்த முன்குறிப்புக்களும் ஆயத்தங்களும் இல்லாமல் வந்த ஒருவன் தற்போது உங்கள் முன்னால் பேசுவதற்காக நிற்கிறேன். ஆனால் பேசுவதற்கு – உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன.