சீன அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதை இலங்கை கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய பிபிசியின் சந்தேஷியவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஞாயிறன்று இரவு மட்டக்களப்பு கடற்பிராந்தியத்தை அண்மித்த பகுதியில் இரண்டு இழுவைப் படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 37 சீனமீனவர்கள் மற்றும் இரண்டு இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இவர்கள் திருகோணமலை துறைமுகப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டனர்.
இந்தப் படகுகளுக்கு இலங்கை மீன்பிடித்துறை அமைச்சால் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் கூட இலங்கைக் கடற்பரப்பில் 200 கடல்மைல்களுக்கு அப்பால் இவாகள் மீன்பிடிப்பதற்கே அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இவர்களோ வழங்கப்பட்ட அனுமதியையும் மீறி பத்து அல்லது பதினைந்து கடல் மைல் பிரதேசத்துக்குள்ளேயே மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக இவர்களை விடுவிக்குமாறு இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் கோரிக்கை விடுத்தது.