செய்தி
(2ம் இணைப்பு)
 
அநுராதபுர சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட மற்றும் ஒரு தமிழ் அரசியல் கைதி மரணம்
[ புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012, 04:55.01 AM GMT ]
வவுனியா சிறைச்சாலையில் இருந்து கடந்த மாதம் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கு வைத்து சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி இன்று காலை மரணமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தில்ரூக்ஷன் என்ற தமிழ் அரசியல் கைதியே  உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தில்ரூக்ஷன் என்ற இளைஞர் நேற்றிரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் இந்த இளைஞர் சிகி;ச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர், மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார் இந்தநிலையிலேயே மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளை பணயம் வைத்தமையை அடுத்தே அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகள் அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிமலரூபன் என்ற இளைஞர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

இரண்டாம் இணைப்பு

வவுனியா சிறைச்சாலையில் கடந்த மாதம் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட பிறிதொரு தமிழ் அரசியல் கைதி இன்று காலை
மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார்.

இன்று ராகம மருத்துவமனையில் மரணமானவர் 34 வயதான மரியதாஸ் நேவிஸ் தில்ருக்ஷன் எனவும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்  எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த அரசியல் கைதி வவுனியா சிறைச்சாலையில் மோதல் ஏற்பட்ட தினத்திலிருந்தே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக மஹர மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளை பணயம் வைத்ததை தொடர்ந்து அங்கிருந்ததமிழ் அரசியல் கைதிகள் அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்தநிலையில் ஏற்கனவே சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான 29 வயதான வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த கணேசன் நிமலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதியும் கடந்த மாதம் மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணமானமையும் சுட்டிக்காட்டத்தக்கது.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 18-05-2013, 07:27.11 AM ]
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குழுக்களால் இடித்தழிக்ககப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 18-05-2013, 07:15.08 AM ]
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று மற்றும் பூநகர் ஆகிய கிராமங்களில் மூவர் பாம்புக் கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
[ Saturday, 18-05-2013, 06:02.50 AM ]
மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் எதிர்வரும் 21ம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
[ Saturday, 18-05-2013, 05:49.22 AM ]
இந்த வருடத்தின் ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான முதல் காலாண்டில் சர்வதேச அளவில் கறுப்பு தேயிலை உற்பத்தி, 18.18 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 18-05-2013, 05:37.53 AM ]

சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் நேற்று நடைபெற்றது.

[ Saturday, 18-05-2013 07:31:32 GMT ]
பாகிஸ்தானில் ஜனாதிபதி சர்தாரி உட்பட பெரும்புள்ளிகளில் வீட்டை தாக்க தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை, அரசிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
[ Saturday, 18-05-2013 07:24:01 GMT ]
பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்பு, உதயநிதி ஸ்டாலினிடம் ஹம்மர் காரை சிபிஐ ஒப்படைத்தது.
[ Saturday, 18-05-2013 07:06:49 GMT ]
டெஸ்ட் போட்டியில் சாதிக்க கிறிஸ் கெய்ல், டிவிலியர்ஸ் தந்த ஆலோசனைகள் முக்கிய காரணம் என்று பெங்களூர் அணியின் இளம் இந்திய வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
[ Saturday, 18-05-2013 07:17:24 GMT ]
முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 07:54:31 GMT ]
தனது பிறந்த நாளன்று பிரியாணி படத்தின் டீசரை வெளியிட கார்த்தி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 17-05-2013 16:12:03 ]
எல்லோருக்கும் வணக்கம். எனது ஆய்வுத்துறை சார்ந்து பார்வையாளனாக பேசுவதற்கான எந்த முன்குறிப்புக்களும் ஆயத்தங்களும் இல்லாமல் வந்த ஒருவன் தற்போது உங்கள் முன்னால் பேசுவதற்காக நிற்கிறேன். ஆனால் பேசுவதற்கு – உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன.