13 வது திருத்தச்சட்டம் ரத்தானால் மீண்டும் மோதல் வெடிக்கும்! பிள்ளையான் எச்சரிக்கை
13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ரத்துச் செய்யப்படுவதை நான் கடுமையாக எதிர்ப்பேன் என்று அவர் கூறினார்.
இந்த அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, மாகாணசபைகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் உட்பட நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் 13 வது அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக கடும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இதன் மூலம் அந்த மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பது முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த அரசமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கூறுபவர்கள் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு சிலரே அன்றி அரசு அல்ல என்று அவர் மேலும் தெரிவித்தார்.