செய்தி
வடக்கில் மாகாண சபை இன்றி, திவிநெகும திட்டத்தை அமுலாக்க முடியாது
[ செவ்வாய்க்கிழமை, 02 ஒக்ரோபர் 2012, 02:13.25 AM GMT ]

வடமாகாணத்தில் மாகாண சபை அமைக்கப்படாத நிலையில், திவி நெகும சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது சட்டத்துக்கும், அரசியல் அமைப்புக்கும் முரணானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள முக்கிய சட்டத்தரணி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 13ம் திருத்தச் சட்டத்தின் கீழும், இலங்கையின் அரசியல் யாப்பின் அடிப்படையிலும், மாகாண சபைகளின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான சட்ட மூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது, ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் இலங்கையில் வடக்கிலும் மாகாணம் என்ற ஒன்று இருக்கின்ற நிலையில், அதன் மாகாண சபையில் இந்த சட்ட மூலத்துக்கு அனுமதி பெறுவது முக்கியமானதாக காணப்படுகிறது.

இந்த நிலையில், வடமாகாண சபையின் அனுமதியை பெறுவதற்காக, வடமாகாண ஆளுனரின் தன்னிச்சையான அனுமதியை அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமா, அல்லது அரசியல் காரணங்களுக்காக வடக்கில் உடனடியாக அரசாங்கம் தேர்தல் நடத்துமா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 06:19.57 AM ]
யாழ் மாவட்ட கூட்டுறவுக் கல்லூரி கிறிஸ்தவ அமைப்பொன்றின் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 21-05-2013, 05:28.51 AM ]
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி நோக்குடன் எதிர்க்கட்சிகள் நடத்தவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லையென 65 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
[ Tuesday, 21-05-2013, 05:22.48 AM ]
இலங்கைக்கு தொடர்ச்சியாக நிதி உதவிகள் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
[ Tuesday, 21-05-2013, 04:40.49 AM ]

விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் மும்பாய் வானூர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 04:34.51 AM ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில்  வெடிக்காத குண்டு ஒன்றை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மீட்டுள்ளனர்.
[ Tuesday, 21-05-2013 04:56:05 GMT ]
ரஷ்யாவை 6.0 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று தாக்கியது.
[ Tuesday, 21-05-2013 05:13:45 GMT ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம்.
[ Tuesday, 21-05-2013 03:21:02 GMT ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
[ Monday, 20-05-2013 07:13:25 GMT ]
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம்.
[ Tuesday, 21-05-2013 06:13:54 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கடந்த வாரம் டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.