செய்தி
(2ம் இணைப்பு)
Photo
109 தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணைவு! ஆயுதப் பயிற்சி வழங்கப்படமாட்டாது! - மேஜர் ஜெனரல் உதய பெரேரா
[ சனிக்கிழமை, 17 நவம்பர் 2012, 10:04.49 AM GMT ]
இலங்கை ராணுவத்துக்கு வடக்கின் தமிழ் பெண்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று கிளிநொச்சி பாரதிபுரத்தில் மிக சிறப்புற இடம்பெற்றுள்ளது.

இதன்போது 109 தமிழ்ப் பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதாக கிளிநொச்சி பாதுகாப்பு படையணி தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் நியமனங்களைப் பெற்றுக்கொள்ளுமுகமாக வட மாகாணத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள் தமது பெற்றோருடன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை ராணுவத்தின் தொழிற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள இவர்கள், ராணுவ மகளிர் படையின் 6 ஆவது படையணியின் கீழ் செயற்படவுள்ளனர்.

குறித்த பெண்களுக்கு ராணுவ ஆயுதப்பயிற்சி வழங்கப்பட மாட்டாதெனவும், ராணுவத்தில் உள்ள 105 ற்கும் மேற்பட்ட தொழிற்றுறைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

35 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட சம்பளமும், மேலதிக கொடுப்பனவும், இலவச சீருடை, போக்குவரத்து வசதி, திருமணத்தின் பின்னரான விடுமுறை சலுகை, பிள்ளைகளை தேசிய
பாடசாலைகளில் இணைத்தல், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல வசதிகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கிலிருந்து தமிழ் யுவதிகளை ராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் கடந்த வாரங்களில் இடம்பெற்ற நிலையிலேயே குறித்த 109
பேரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் 2000 தமிழ் பேசும் அதிகாரிகளை பொலிஸ் பிரிவில் இணைத்துக்கொள்ளும் செய்திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பொரும்பாலானவர்கள் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர, வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் பாதுகாப்புப் படையில் நிலவும் தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 5000 புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களை இணைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன,

இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படுவோர் விவசாய திட்டங்கள் மற்றும் அபிவருத்தி நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்படுவர்.

இதன் முதற்கட்டமாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து 1500 புனர்வாழ்வளிகப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 07:27.11 AM ]

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 06:53.48 AM ]

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 06:38.05 AM ]
அபிவிருத்தி என்னும் பெயரில் வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013, 06:19.57 AM ]
யாழ் மாவட்ட கூட்டுறவுக் கல்லூரி கிறிஸ்தவ அமைப்பொன்றின் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 21-05-2013, 05:28.51 AM ]
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதி நோக்குடன் எதிர்க்கட்சிகள் நடத்தவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லையென 65 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
[ Tuesday, 21-05-2013 07:53:36 GMT ]
இஸ்ரேலின் தென்பகுதி நகரமான பீர்ஷெபாவில் உள்ள ஹெபோலிம் என்ற வங்கிக்கு துப்பாக்கியுடன் வந்த ஒரு மனிதன் அங்கிருந்த 4 பேரை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 21-05-2013 05:13:45 GMT ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம்.
[ Tuesday, 21-05-2013 03:21:02 GMT ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 07:54:53 GMT ]
இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் படம் தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.