அதற்கு பதிலாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த இது தொடர்பில் கருத்துரைக்கையில், உயர் நீதிமன்றம், 13வது திருத்த பிரேரணையின் போது சர்வஜன வாக்கெடுப்பு தீர்ப்பை வழங்காமல் திவிநெகும சட்ட மூலத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் விடயமாக அரசாங்கம் கருதுகிறது. எனவே திவிநெகும சட்டமூலத்தில் திருத்தங்களை செய்து அதனை சட்டபூர்வமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.