செய்தி
இலங்கையின் பல பாகங்களிலும் பறக்கும் ஒளிக் கற்கள்! புவியீர்ப்பின் காரணமாக பூமியில் விழலாம்! மக்கள் அச்சம்
[ புதன்கிழமை, 12 டிசெம்பர் 2012, 04:07.39 PM GMT ]
நாட்டின் பல பாகங்களிலும் இரவு வேளைகளில் தென்பட்ட பறக்கும் ஒளிக்கற்கள் அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் தெரிவித்துள்ளார்.

கம்பஹா, சிலாபம், அநுராதபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் பறக்கும் ஒளிக்கற்களை தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருந்துள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் கூறுகையில், குறித்த ஒளிப்பிழம்பினை கண்காணிக்கும் முகமாக 24 மணிநேர சேவையில் விமானப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது வான்பரப்பு மழுவதுமாக அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரையில் ஒளிப்பிழப்பினை விமானப்படையினரால் காணமுடியவில்லை. ஏனெனில் ஓளியாக மட்டும் தென்படுவதால் அது விமானப்படையின் ராடர் கருவிகளில் பதிவாகும் வாய்ப்புக்கள் குறைவு.

மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்றும் இது தொடர்பில் அவதானிக்கின்றது.

குறித்த ஒளிப்பிழம்பு ஒரு கோளாக இருக்கலாம் எனவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது. எனவே மக்கள் வீணாக அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றார்.

இதேவேளை வியாழன் கோளுக்கு அண்மையில் புதிய கோளொன்று வெடித்துச் சிதறியதில் பறக்கும் கற்கள் எனப்படும் அஸ்டரொய்ட்டுக்கள் அண்டவெளியில் சுற்றுவதாக நாசா தெரிவித்திருந்தது.

இந்த பறக்கும் கற்கள் புவியீர்ப்பின் காரணமாக பூமியில் விழலாம். ஆனால் அவை எவ்வித ஆபத்தினையும் விளைவிக்காது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 18-05-2013, 09:33.43 AM ]
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல்போனதாக கூறப்பட்ட பெண், இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் எல்பிட்டிய பிட்டிகல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
[ Saturday, 18-05-2013, 09:00.07 AM ]

பொதுபல சேனாவின் வருகையினால் முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்திருப்பதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

[ Saturday, 18-05-2013, 08:30.20 AM ]

யுத்த வெற்றி விழா கொண்டாட்டம் காலிமுகத்திடலில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

[ Saturday, 18-05-2013, 07:27.11 AM ]
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குழுக்களால் இடித்தழிக்ககப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 18-05-2013, 07:15.08 AM ]
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று மற்றும் பூநகர் ஆகிய கிராமங்களில் மூவர் பாம்புக் கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
[ Saturday, 18-05-2013 08:21:20 GMT ]
சிங்கப்பூரில், மனைவியை கத்தியால் தாக்கி கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி கணவருக்கு ஒன்பது மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
[ Saturday, 18-05-2013 07:24:01 GMT ]
பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்பு, உதயநிதி ஸ்டாலினிடம் ஹம்மர் காரை சிபிஐ ஒப்படைத்தது.
[ Saturday, 18-05-2013 08:48:36 GMT ]
ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கியுள்ள பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
[ Saturday, 18-05-2013 07:17:24 GMT ]
முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Lenovo ஆனது IdeaPad Yoga 11S எனும் புத்தம் புதிய ஹைப்பிட் மடிக்கணனியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-05-2013 08:38:26 GMT ]
ஸ்ரீ வள்ளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக கே. குருநாதன், பி. ஏலப்பன், எம். தர்மராஜன், பாலகிருஷ்ணன். கே ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ரம்மி” என்று பெயரிட்டுள்ளனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 17-05-2013 16:12:03 ]
எல்லோருக்கும் வணக்கம். எனது ஆய்வுத்துறை சார்ந்து பார்வையாளனாக பேசுவதற்கான எந்த முன்குறிப்புக்களும் ஆயத்தங்களும் இல்லாமல் வந்த ஒருவன் தற்போது உங்கள் முன்னால் பேசுவதற்காக நிற்கிறேன். ஆனால் பேசுவதற்கு – உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன.