செய்தி
மாணவர்களை விடுவிக்குமாறு துணைவேந்தர் யாழ். தளபதியிடம் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 03 டிசெம்பர் 2012, 04:46.38 PM GMT ]

வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்ட அதேவேளை மாணவன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சக மாணவர்கள் நால்வரையும் விடுதலை செய்யக் கோரியே இன்று மருத்துவ பீட மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, மாணவர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் மாணவன் எங்கே என தாயாரிடம் விசாரித்துள்ளனர். இது தொடர்பில் தகவலறிந்த மாணவர்கள், இது தொடர்பில் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அறிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் யாழ். கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது, பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தில் இருக்கும் இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் காவலரண்களை அகற்றுமாறும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவத்தினர் நுழைவதையும் மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 08:19.53 AM ]
மட்டக்களப்பு நகரின் முகவாயிலாக விளங்கும் ஊறணி கொத்துக்குளத்து மாரியம்மன் கோயிலை அண்டிய பிரதான வீதியில் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பிக்குவின் வேண்டுகோளின் பேரில் புத்தர் சிலை வைக்கப்படுவதற்கு ஒழுங்குகள் நடைபெறுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
[ Friday, 24-05-2013, 07:22.29 AM ]
வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.
[ Friday, 24-05-2013, 07:12.36 AM ]

மாற்றுவலுவுடையவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல என யாழ்.மாவட்ட முன்னாள் அரச அதிபரும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளருமான திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

[ Friday, 24-05-2013, 06:58.17 AM ]
இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய மூன்று பேரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
[ Friday, 24-05-2013, 06:36.23 AM ]
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடக்குமா? என்ற சந்தேகம் தேவையற்றதாகி விட்டது. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஜனாதிபதி விலக முடியாது என்பது உறுதியாகியுள்ளது.
[ Friday, 24-05-2013 08:20:38 GMT ]
ரஷ்யாவின் எஸோ நகருக்கு அருகே சுமார் 359 கிலோமீற்றர் தொலைவில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.2 ஆகப் பதிவாகி உள்ளது.
[ Friday, 24-05-2013 06:31:17 GMT ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
[ Friday, 24-05-2013 05:20:54 GMT ]
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன.
[ Friday, 24-05-2013 08:46:56 GMT ]
வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி தெரியாது.
[ Friday, 24-05-2013 08:21:30 GMT ]
கொலிவுட்டில் சித்தார்த், ஹன்சிகா மொத்வானி நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.