செய்தி
 Photo
மிருகங்களை விட கேவலமாக நடத்தும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள்: சிறீதரன் எம்பியிடம் கண்ணீர் மல்கிய மருதநகர் மக்கள்!
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 08:27.42 AM GMT ]
நிம்மதியாக வாழ ஒரு துண்டு காணியும், அரை நிரந்தர வீடும் கேட்டதற்காக ஆளும் தரப்பு அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் தம்மை மிருகங்களை விடவும் கேவலமாக நடத்துவதாக பன்னங்கண்டி மக்கள் கண்ணீர் மல்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனிடம் கூறியுள்ளனர்.

கடந்த 30 வருடத்திற்கும் மேலாக பன்னங்கண்டி- மருதநகர் கிராமத்தில் வாழும் மக்களுக்கு இதுவரை நிரந்தரமாக ஒரு காணியும், வீடும் இல்லாத நிலையில், வயல் நிலங்களில் வாழ்ந்து வரும் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழையினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

தற்போதும் 28 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பன்னங்கண்டி பாடசாலையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த மக்களை பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டபோதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றனர்.

அங்கு அவர்கள் தொடந்து தெரிவிக்கையில்,

ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் காணி பெற்றுத் தருவதாக கூறி எம்மை ஏமாற்றி தமது அரசியற் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். புதிய கட்டிடங்கள் திறப்பதற்கும், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் காணி கொடுப்பதற்கான பதிவு என்ற பெயரில் பேருந்துகளில் அழைத்துச் சென்றுவிட்டு அவர்களின் தேவைகள் முடிந்தவுடன் கைவிட்டு விடுகிறார்கள்.

இறுதியில் காணியும் இல்லாமல், சாப்பாடும் இல்லாமல் நடந்து ஊர் திரும்புகின்றோம். இதுவே கடந்த 3வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஒரு அரைநிரந்தர வீடு கொடுங்கள் எனக் கேட்டால் பிரதேச செயலர் கேட்கிறார் ஏன் உங்களுக்கு கணவன்மார் இல்லையா? அவர்கள் எங்கே என்று?

அதுபோதாதென்று கதைக்கப்பேச தெரியாதவர்கள் என்றும், யாருடன் எப்படிப் பேச வேண்டும் என்றும் உங்களுக்கு தெரியாது என்றும் மிகவும் கேவலமான முறையில் மக்களுக்கு மத்தியில் வைத்து திட்டியனுப்புகின்றார்.

இந்த நிலையில் ஒரு வீடு கேட்டதற்காக மிருகங்களை விடயும் மோசமாக நடத்தப்படுகின்றோம். அரசியல் வாதிகளும் அவ்வாறே நடந்து கொள்கின்றார்கள்,  காணி கேட்டால் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் டோக்கன் தருகிறார்கள். 15 நாட்களில் வீடு தருகிறோம் என்கிறார்கள். ஆனால் இன்றுவரை 3 வருடத்திற்கு முன்னர் மீள்குடியேற்றத்தின்போது கொடுத்த தறப்பாள் கூடாரத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இந்நிலையில் யாரிடம் செல்வது, எமது வேதனைகளை தீர்க்க என்ன வழி உள்ளது என்று தெரியாமல் கடும் மழை, சேறு, சகதிகளுக்குள்ளும் வெயிலுக்குள்ளும் வருடத்துக்கு பல தடவைகள் இடம்பெயர்ந்து கொண்டு விலங்குகளிலும் பார்க்க மோசமான நிலையில் வாழ்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ்விடயம் குறித்து தம்மால் முடிந்த உதவிகளை மிகவிரைவில் செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 02:58.09 AM ]
தங்கநகை தொழிற்சாலையில் கஜ முத்துக்கள் மறைத்து வைத்திருப்பதை சோதனையிட வந்ததாகக் கூறி துப்பாக்கிகளுடன் இராணுவ சீருடையில் வந்த கோஷ்டி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கண்டி நகரில் நிகழ்ந்துள்ளது.
[ Thursday, 23-05-2013, 02:54.56 AM ]

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகருக்கு வரும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

[ Thursday, 23-05-2013, 02:44.45 AM ]

இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.

[ Thursday, 23-05-2013, 02:41.27 AM ]
மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் 19வது திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் எந்த வகையிலும் ஆதரவு அளிக்கக்கூடாது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
[ Thursday, 23-05-2013, 02:22.50 AM ]

ஈழத்தமிழர்கள் 2009 ம் ஆண்டு இலங்கையில் ஒரு பாரிய தமிழ் இனவழிப்பு நடக்கப் போகின்றது என்பதை உலகம் பூராவும் சாலை மறியல்கள் மூலமாகவும், உண்ணாவிரதங்கள் மூலமாகவும், எழுச்சி ஊர்வலங்கள் மூலமாகவும் இந்த சர்வதேசத்திற்கு இடித்துச் சொன்னார்கள்.

[ Wednesday, 22-05-2013 17:51:25 GMT ]
போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 60 இந்தியக் கைதிகள் தாய்லாந்து சிறைகளில் உள்ளனர்.
[ Thursday, 23-05-2013 01:44:57 GMT ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Wednesday, 22-05-2013 18:32:41 GMT ]
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Wednesday, 22-05-2013 07:38:03 GMT ]
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Thursday, 23-05-2013 02:41:26 GMT ]
மங்காத்தாவுக்கு பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்து, அவரது மவுசு இறங்கி விட்டதாக பொதுவாக பேச்சுகள் நிலவுகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.