செய்தி
இரு துறைசார் நிபுணர்கள் கூறிய தமிழர்களின் கலாசார சீரழிவும்! அதற்கான மருந்தும்!
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 10:29.30 AM GMT ] [ valampurii.com ]
தமிழர்களின் கலாசாரம் சீரழிகின்றது என, ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் நிகழ்வொன்றில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் கலாசாரம் சீரழிகிறது என ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் கூறியிருப்பதை எவரும் சாதாரணமான விடயமாகக் கருதிவிடக் கூடாது.

நாங்கள் தமிழர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்வதற்கு அடிப்படையாக இருப்பது எங்கள் கலாசாரம் என்பதை எவரும் மறந்துவிடமுடியாது.

எனவே தமிழினத்தின் அடையாளமாக இருக்கக் கூடிய கலாசாரத்தை அழிய விடுவோமாக இருந்தால் அது தமிழினத்தின் அழிவாக இருக்கும் என்பதே நீதியரசரின் தீர்ப்பு.

ஆக, எங்கள் இனத்தில் தற்போதுள்ள நோய் என்ன? என்பதை ஓய்வுபெற்ற நீதியரசர் மிகவும் ஆணித்தரமாக கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ளும் போது, நோய்க்கான மருந்துபற்றி சிந்திப்பதும் அதனைத் தேடிக்கொள்வதும் மிகவும் அவசியமானதாகின்றது.

நோயை இனங்காண்பது எத்துணை முக்கியமானதோ அதனைவிடப் பன்மடங்கு முக்கியமானது நோய்க்கான மருந்து.

எங்கள் கலாசாரம் சீரழிகிறது என, நாம் கூறிக் கொள்வதால் அது கட்டுப்பட்டு விடப்போவதில்லை.

எனவே அதனைத் தடுப்பதற்கு ஏற்ற திட்டங்களை வகுப்பது அவசியமானதாகும்.

எங்கள் கலாசாரம் சீரழிகிறது என ஓய்வு பெற்ற நீதியரசர் கூறுவதற்கு சில காலங்களுக்கு முன், யாழ்ப்பாணப் போதனா வைத்திய சாலையின் வைத்திய நிபுணர் பேரானந்தராஜா அவர்கள் ஒரு சந்திப்பின்போது, எங்கள் பிள்ளைகளை ஆத்மீகத்தால் மட்டுமே ஒழுங்குபடுத்த முடியும்.

ஆத்ம பலம் - ஆத்ம சக்தி எங்கள் இளம் பிள்ளைகளிடம் ஏற்பட்டு விட்டால் எங்கள் பண்பாடு எங்கள் கலாசாரம் என்று எதற்குமே நாம் ஏக்கம் கொள்ளத் தேவையில்லை.

ஆத்மீகத்தை பாடசாலைகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனிடமும் ஆத்மீகத்தை ஏற்படுத்துவதுதான் ஒரேவழி என்று குறிப்பிட்டார்.

ஆம், ஆத்மீக தானம் என்பது இன்று எமக்கு அவசர தேவையாகவுள்ளது.

இளைஞர்களின் பிறழ்வான போக்குகளுக்கு இறைநம்பிக்கை பற்றிய நினைப்பு அறவே இல்லாமையே மூல காரணம் எனலாம்.

ஒரு இளைஞனை மேற்பார்வை செய்வதென்பது முடியாத காரியம்.

ஆனால் ஒரு இளைஞனிடம் இறை நம்பிக்கையையும் பாவம் புண்ணியம் என்ற மன உணர்வையும் ஏற்படுத்திவிட்டால் அவன் தன்னை மனிதனாக வளப்படுத்திக் கொள்வதற்கு அது போதும்.

எனவே, வைத்திய நிபுணர் பேரானந்தராஜா அவர்களின் கருத்தை அனைத்துப் பாடசாலைகளும் சிரமேற்கொண்டு செயற்படுத்துமாயின் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும் என்பது திண்ணம்.

எங்கள் மண்ணில் வாழ்கின்ற ஓய்வுபெற்ற நீதியரசரும் வைத்திய நிபுணரும் எங்கள் தொடர்பில் கூடிய கருத்துக்களை கல்விச்சமூகம் கரிசனையோடு நோக்க வேண்டும்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 10:43.26 AM ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.
[ Tuesday, 21-05-2013, 08:32.13 AM ]
சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
[ Tuesday, 21-05-2013, 07:27.11 AM ]

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 06:53.48 AM ]

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 06:38.05 AM ]
அபிவிருத்தி என்னும் பெயரில் வடமாகாண ஆளுநரின் பாரிய நிதி மோசடி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 08:41:32 GMT ]
சீன மீனவர்கள் 16 பேர் கடந்த வருடம் மே மாதம் 6ம் திகதி அன்று வடகொரியா மற்றும் சீன கடல் எல்லைக்கு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபொழுது கைது செய்யப்பட்டனர்.
[ Tuesday, 21-05-2013 05:13:45 GMT ]
தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளது இந்திய மருத்துவர்கள் சங்கம்.
[ Tuesday, 21-05-2013 07:33:48 GMT ]
கிரிக்கெட் சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி என்பது குறித்து மேலும் பல புதிய தகவல் கிடைத்துள்ளன.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 08:28:53 GMT ]
விஜய்யின் தலைவா படமும், சூர்யாவின் சிங்கம்-2 படமும் ஒரே நாளில் வெளியாகி மோதப் போகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.