அச்செழு இராணுவ முகாமில் பெண் சிப்பாய்களுக்கிடையில் துப்பாக்கி சூடு!- ஒருவர் படுகாயம்
இருவருக்கும் இடையில் காணப்பட்ட முரண்பாடு காரணமாக ஒருவர் இன்னொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதில் 511 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த 35 வயதுடைய எஸ்.ஜி. சுனேத்ரா என்ற பெண் சிப்பாயே வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இன்றைய தினம் பலாலியில் மிதிவெடியில் சிக்கியது, இராணுவ வாகனம் விபத்து ஆகிய சம்பவங்களுடன் இது இராணுவத்தின் மூன்றாவது விபத்துச் சம்பவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.