செய்தி
வட, கிழக்கு மாணவர்களை குறி வைக்கும் நாமல் ராஜபக்ஷ
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:40.55 AM GMT ]
வடக்கு, கிழக்கு மாகாண மாணவர்களின் விளையாட்டுத் திறமையை மேம்படுத்துவதற்காக சீன அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளது.

இதற்கமைவாக, நான்கு கோடி ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை சீன அரசாங்கம் கையளித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் விளையாட்டு உபகரணங்களை அலரி மாளிகையில் இன்று கையளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய சீன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, யுத்தத்தின் பின்னர் பிள்ளைகளின் மனோநிலையை வழமையான நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்று அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இங்கு குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு, கலாசாரத் துறைகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சீனா விளையாட்டுத்துறை பயிற்சிக்காக எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் உறுதியளித்தார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 02:28.50 PM ]

அரசியலமைப்பின் 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறையை ரத்து செய்யுமாறு கோரி நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 02:24.23 PM ]
ஈரோட்டில் மதுபானக் கடையில் கள்ளநோட்டு மாற்றிய குற்றவாளிகளுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
[ Tuesday, 21-05-2013, 01:44.51 PM ]

ஜப்பானின் இரண்டு யுத்த கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

[ Tuesday, 21-05-2013, 01:39.24 PM ]
நாட்டில் நிலவும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக இன்றிரவு பல பாகங்களில் மழைபெய்யக் கூடும் என்று வானிலை அவதான மையம் எதிர்வு கூறியுள்ளது.
[ Tuesday, 21-05-2013, 12:36.19 PM ]
நெடுங்கேணி சேனைப்புலவு பாடசாலை சிறுமி மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி ஒருவார காலங்களுக்கு மேலாகியும் இன்னமும் கைது செய்யப்படாதுள்ளார். இதனை வன்னி மாவட்ட பிரஜைகள் குழுக்களின் இணையம் ஆகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
[ Tuesday, 21-05-2013 08:41:32 GMT ]
சீன மீனவர்கள் 16 பேர் கடந்த வருடம் மே மாதம் 6ம் திகதி அன்று வடகொரியா மற்றும் சீன கடல் எல்லைக்கு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபொழுது கைது செய்யப்பட்டனர்.
[ Tuesday, 21-05-2013 12:20:54 GMT ]
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 09:30:28 GMT ]
இந்திய அணியுடன் மோதும் போட்டி எப்போதுமே ஸ்பெஷலானது என்கிறார் பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ்.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 12:10:08 GMT ]
மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.