யாழ்.தினக்குரல் செய்தித்தாள் விநியோகஸ்தர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு சில நாட்களேயாகும் நிலையில், தொடர்ந்தும் பத்திரிகை விநியோகஸ்தர்களை படைப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.
கடந்த 7ம் திகதி பருத்தித்துறை வீதியில் புத்தூர் சந்தியில் வைத்து சி.சிவகுமார் என்ற விநியோகஸ்தர் கடுமையாக தாக்கப்பட்டு தற்போதும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் நேற்றும், இன்றும் அதிகாலையில் செய்தித்தாள் விநியோகத்திற்குச் சென்ற நபர்களை முழுதாக முகத்தை மறைத்துக் கொண்டு பின்தொடர்ந்த நபர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களிடமிருந்து தப்பியோடிய விநியோகஸ்தர்கள் பொதுமக்களின் வீடுகளில் ஒழிந்திருந்து விட்டு அதிகாலையே செய்தித்தாள்களை விநியோகித்துள்ளனர்.
இதேபோல் அதிகாலையில் பத்திரிகை அலுவலகத்திற்கு முன்பாகவும், முகத்தை முழுதாக மறைத்திருந்த நபர்கள் சிலர் வழக்கத்திற்கு மாறாக நடமாடியுள்ளனர்.
எனவே யாழ்.மாவட்டத்தில் ஊடகத்துறைக்கு எதிரான அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பது புலனாகின்றது என யாழ் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்..