செய்தி
''ராஜபக்சவே, திரும்பிப் போ!'' - கொதித்த தமிழகம்... கண்டுகொள்ளாத மத்திய அரசு
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 02:08.13 AM GMT ]
ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிராகத் தமிழகம் தகிக்கிறது! ராஜபக்சவுக்கு எதிராக முதன்முத​லாக தமிழக எல்லையைத் தாண்டி ம.தி.மு.க. சார்பில் மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி சாஞ்சியில் போராட்டம் நடந்தது.

அப்போது ''தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ச இனி இந்தியா வந்தால், அதைக் கண்டிக்கும் விதமாக பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம்'' என்று அறிவித்தார் வைகோ.

இந்த நிலையில் பிப்ரவரி 8-ம் தேதி ராஜபக்ஷே திருப்பதி வந்து சாமி கும்பிடுகிறார் என்றவுடன், பிரதமர் வீடு முற்றுகைப் போராட்ட அறிவிப்பை உறுதி​படுத்தினார் வைகோ.

டெல்லி போராட்டத்துக்காக தமிழகம் முழுக்க இருந்து 500 பேர் ரயில் மூலம் கடந்த 5-ம் தேதி புறப்பட்டுச் சென்றனர். சென்னையில் இருந்துச் சென்ற​வர்களை வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

 ''இலங்கையில் 1,607 இந்துக் கோயில்கள் உடைக்கப்​பட்டுள்ளதை நாடாளுமன்றத்தில் சிங்கள அரசு ஒப்புக்கொண்டுள்ளது. தமிழர்கள் வழிபாட்டுத் தலங்களில் சிங்கள இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. புதிது புதிதாக புத்த விகாரைகள் கட்டப்படுகிறது. இந்துக் கோயில்களை உடைத்து நொறுக்குபவன், திருப்பதிக் கோயிலுக்கு உள்ளே நுழைவதை மட்டும் அனுமதிக்கலாமா?'' என்கிறார் வைகோ ஆவேசமாக.

சென்னையில் கடந்த 4-ம் தேதி கருணாநிதி தலை​மையில் நடந்த டெசோ ஆலோசனைக் கூட்டத்தில், ''இலங்கை அதிபர் இந்தியா வருவதை மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது. அவர் வருகையை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அவரது வருகையைக் கண்டித்து, சென்னையில் 8-ம் தேதி கறுப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று போராட்டத்துக்கு தி.மு.க-வும் தேதி குறித்தது. விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் இயக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் ஈழ ஆதரவு அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் என போராட்டங்களைக் கையில் எடுத்தனர்.

சென்னை எழும்பூரில் உள்ள் பாங்க் ஆஃப் சிலோன் கிளைக்குள் 7-ம் தேதி மதியம் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் புகுந்து கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர்.

திருப்பதி வரும் ராஜபக்ஷேவைக் கண்டித்து தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தின் முன்பு 7-ம் தேதி தமிழர் எழுச்சி இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அந்த இயக்கத்தின் பொதுச்​செயலாளர் வேலுமணி, ''இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் ராஜபக்ச நுழைய முடியாத நிலை உருவாகி உள்ளது.

அமைதியை நாடும் உலக நாடுகளால் வெறுக்கப்படும் ராஜபக்சவை, மத்திய அரசு வரவேற்கிறது. இலங்கைக்கு அருகில் உள்ள இந்தியாவே உறுதுணையாக இருக்கிறது என்று உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்தவே, ராஜபக்ச அடிக்கடி இந்தியா வருகிறார்.

தமிழகத்துக்கு அருகில் உள்ள, தமிழர்களால் கட்டப்பட்ட திருப்பதிக்கு ராஜபக்ஷே வரும்போது அவரைப் பாதுகாப்பதற்கு முஸ்தீபு காட்டும் அளவுக்குக்கூட, ஈழத்தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

குஜராத்தில் பூகம்பம், கார்கில் பிரச்னை என்றால் இந்தியன் என்ற உணர்வோடு தமிழர்கள் ஓடோடிச் சென்று நிதி கொடுக்கிறோம். உதவி செய்கிறோம். ஆனால், தமிழர்களுக்குக் குரல் கொடுக்க மற்ற திராவிடர்கள்கூட முன்வரவில்லை.

இந்திய அரசும் உதவ மறுக்கிறது. பிற மாநிலங்​களின் ஆதரவும் இல்லை. இந்த நிலையில் தனித் தமிழ்நாடு கோரிக்கை தானாகவே எழுந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதை செய்ய இந்திய அரசே தூண்டுவதுபோல அவர்களின் செயல்பாடும் இருக்கிறது'' என்று வருத்தப்பட்டார்.

அண்டை நாட்டு உறவு என்ற பெயரில், கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கொடுமையை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மத்திய அரசு தொடரப் போகிறதோ..!

ஜூனியர் விகடன்


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 20-05-2013, 08:22.11 AM ]
அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் நேற்று தமிழர் இனவழிப்பை நினைவுபடுத்தும் புகைப்படக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
[ Monday, 20-05-2013, 07:14.41 AM ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

[ Monday, 20-05-2013, 06:48.07 AM ]

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

[ Monday, 20-05-2013, 06:23.37 AM ]
மோசமாக சேதமடைந்துள்ள வீதியை திருத்தித் தரக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களை, இலங்கையின் புனர்வாழ்வு அமைச்சர் குணரத்ன வீரக்கோன் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளார்.
[ Monday, 20-05-2013, 06:11.26 AM ]
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், அவர் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Monday, 20-05-2013 05:34:22 GMT ]
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது.
[ Monday, 20-05-2013 06:51:24 GMT ]
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
[ Monday, 20-05-2013 06:42:30 GMT ]
கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதாகியுள்ள தரகர்களுக்கு எராளமான உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஏஜென்ட்களாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது.
[ Monday, 20-05-2013 06:21:01 GMT ]
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான்.
[ Monday, 20-05-2013 08:27:21 GMT ]
ஒன்பதுல குரு படத்திற்குப் பின்பு கோடம்பாக்கத்தை காலி செய்துவிட்டு பெங்களூர், மும்பை என்று இடம்பெயர்ந்து விட்டார் லட்சுமிராய்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 10:38:57 ]
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.