செய்தி
(2ம் இணைப்பு)
Photo
இலங்கை அரசின் அடாவடித்தனம்!-சுயாதீன விசாரணை கோரி ஜெனீவாவில் வெள்ளம் போல் திரண்ட மக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 12:18.51 AM GMT ]

இலங்கை அரசாங்கத்தின் அடாவடித்தனத்தைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன விசாரணையை துரிதப்படுத்த வேண்டி ஜெனீவா புகையிரத நிலைய சந்தியில் இதுவரை காணாத பல்லாயிரம் மக்கள் உலகின் பல பாகங்களிலுமிருந்து திரண்டனர்.

இங்கு கலந்து கொண்ட கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியானஸ், இலங்கை அரசின் அடாவடித்தனம் நீடிக்குமானால் பொது நலவாய நாடுகள் அமைப்பிலிருந்தும், ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் நிரந்தரமாக விலக்கி வைக்க நாம் தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்தார்.

இன்று 2.00 மணியளவில் சுவிஸ் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை அரசு தமிழ் இனத்தின் மீது நடத்திய இன அழிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன விசாரணையை துரிதப்படுத்த வேண்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து பல்லாயிரம் மக்கள் புடைசூழ பலரின் கரங்களில் பாலச்சந்திரன் படுகொலையை சித்தரிக்கும் பல வகை பதாதைகளைத் தாங்கியவாறு உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்த மக்களின் பிரசன்னத்துடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக தமிழ் நாட்டு மருத்துவ பேராசிரியர் தாயப்பன் கலந்து கொண்டதுடன், கனடா நாட்டின் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழருக்காக குரலுமான ஜிம் கரியானஸ் வழங்கிய தனதுரையில்,

தமிழர்களாகிய உங்களோடு தோளோடு தோள் கொடுத்து நிற்பதில் மிகுந்த மகிழ்சி அடைகிறேன். இலங்கையரசின் இனப் படுகொலையை உங்களோடு இணைந்து நாமும் எதிர்க்கிறோம். அந்த அரசு தொடர்ந்து இந்த நிமிடம் வரை தமிழர்கட்கு இன்னல்களையே செய்து வருகிறது.

இப்படிப்பட்ட மனித விழுமியங்கள் தெரியாத இவ் அரசிற்கு ஒரு செய்தியை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் செயற்பாடுகளில் கண்ட கணவுள்ள படு தோல்விகளை இச் சிறிலங்கா அரசு நன்கறியும்.

இந்நிலை நீடிக்குமானால் பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்தும் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் நிரந்தரமாக விலக்கி வைக்க நாம் தொடர்ந்து போராடுவோம் என்பதுடன் என்றும் எம் உறவுகளாம் உங்களின் போராட்டத்திற்கு எம் தார்மீக ஆதரவு உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இவர்களுடன் பிரான்ஸ் நாட்டு மாநகர சபை உறுப்பினர்கள், இத்தாலி நாட்டு மனித உரிமை ஆர்வலர், பல நாட்டு பிரதிநிதிகள் மற்றும் தமிழ் நாட்டு உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-05-2013, 04:21.00 PM ]
புனர்வாழ்வு பெற்றுவருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எஞ்சியுள்ள 340 முன்னாள் போராளிகளையும் இந்த வருட இறுதிக்குள் விடுவிக்க எதிர்பார்க்கப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது.
[ Tuesday, 21-05-2013, 04:09.15 PM ]

இலங்கையில் இவ்வருடத்தின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான காலத்தில் 34 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

[ Tuesday, 21-05-2013, 02:57.53 PM ]

அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டம் கிடையாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013, 02:46.37 PM ]

வவுனியா கனகராயன்குளத்தில் மாற்றுத் திறனாளியான 18 வயது யுவதியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Tuesday, 21-05-2013, 02:28.50 PM ]

அரசியலமைப்பின் 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறையை ரத்து செய்யுமாறு கோரி நாடாளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-05-2013 15:47:04 GMT ]
வங்கதேச தலைநகர் டாக்கா அருகில் உள்ள சாவர் பகுதியில் உள்ள ராணா பிளாசா என்ற 8 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், 1000க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.
[ Tuesday, 21-05-2013 12:20:54 GMT ]
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 09:30:28 GMT ]
இந்திய அணியுடன் மோதும் போட்டி எப்போதுமே ஸ்பெஷலானது என்கிறார் பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ்.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 12:10:08 GMT ]
மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.