புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தேவையான கல்வி மற்றும் ஏனைய தகைமைகளைக் கொண்டிருந்து பொலிஸ் சேவையில் இணைய விரும்பினால், அவர்கள் நிச்சயமாக இலங்கைப் பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 1000 முன்னாள் போராளிகளுக்கு தற்போது பல்வேறு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட் போராளிகள் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், அவர்கள் இப்போது சமூகத்தில் ஒன்றிணைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு நாம் பாரபட்சம் காட்டமுடியாது. அவர்களுக்கு போதிய கல்வித் தகுதியிருந்தால் அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இல்லாதிருந்தால் பொலிஸ் சேவையில் இணைவதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.